வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு, தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

🕔 August 24, 2016

Salma Hamsa - 0005
– பழுலுல்லாஹ் பர்ஹான் –

ன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் நடைபெற்றது.

பிரான்ஸ், சுவிஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளிலுள்ள புகலிடப் பெண்கள் சந்திப்பு நண்பிகளின் முழுமையான அனுசரனையுடன் இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும், முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்ஸா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் – பிரதம அதிதியாக ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி. என்.சத்தியானந்தி கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் ந. கிருஷ்ணபிள்ளை, காத்தான்குடி காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வாழுகின்ற ஏழைப் பெண்களுக்கு அதிதிகளினால் தையல் இயந்திரங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.Salma Hamsa - 0004

Comments

புதிது பேஸ்புக் பக்கம்