இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்; வரலாற்று நாயகியானார் சாக்ஷி மாலிக்

🕔 August 18, 2016

Sakshi malik - 07லிம்பிக் போட்டி வரலாற்றில், முதன் முதலாக இந்தியப் பெண் ஒருவர் பதக்கம் வென்றுள்ளார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில், மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மாலிக் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்று இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்றுக்கொண்ட முதல் பதக்கமும் இதுவாகும்.

இதன்மூலம் ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சரித்திர சாதனையை,  ஹரியாணாவைச் சேர்ந்த சாக்‌ஷி படைத்துள்ளார்.

ஆட்டநேரம் முடிவதற்கு சில நொடிகளே இருந்த நிலையில், கடைசி நேரத்தில் சாக்‌ஷி பெற்றுக்கொண்ட மூன்று புள்ளிகளே பதக்கத்தை வெல்ல காரணமாக அமைந்தன.

ரியோ ஒலிம்பிக் தொடங்கி 12 நாட்கள் கழிந்துள்ள நிலையில், இந்தியாவின் பதக்க தாகத்தை சாக்‌ஷி தீர்த்து வைத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்