பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

🕔 August 8, 2016

Strike - SEUSL - 02ல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் இணைத் தலைவர் டயஸ் விஜயகுமார தெரிவித்துள்ளார்.

உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பளத்தை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 07 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் கடந்த 27ஆம் திகதி முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பணிப் பகிஷ்கரிப்பினால் நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்