கடமைக்குத் திரும்பா விட்டால், வேலை கிடையாது: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

🕔 August 5, 2016

University Grants Commission - 098ல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், தமது பணிப் பகிஷ்கரிப்பினைக் கைவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை முதல், கடமைக்குத் திரும்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கிணங்க கடமைக்குத் சமூகமளிக்காத ஊழியர்கள் தமது பணியிலிருந்து நீங்கியவர்களாகக் கருதப்படுவார்கள் என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா கூறியுள்ளார்.

இதேவேளை, இவ்வாறான அறிவிப்புக்களால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்க முடியாது என்று, அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் கே.எல்.டீ.ஜீ. ரிஜ்மன்ட் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 27ஆம் திகதி முதல், பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்