இந்தியக் கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு

🕔 July 28, 2016

Gnaanakkootthan  - 976ந்தியக் கவிஞர் ஞானக்கூத்தன் நேற்று புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார்.

கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றறிருந்த ஞானக்கூத்தன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு 73 வயதாகிறது.

மயிலாடுதுறையில் 1938 ஆம் ஆண்டு பிறந்த ஞானக்கூத்தன், ஏராளமான கவிதை நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மீது பற்றுக்கொண்ட அவர், ரங்கநாதன் என்ற இயற்பெயரை ஞானக்கூத்தன் என மாற்றிக்கொண்டார். ‘அன்று வேறு ஞாயிற்றுகிழமை’, ‘சூரியனுக்கு பின் பக்கம்’, ‘கடற்கரையில் சில மரங்கள்’ உள்ளிட்ட கவிதை நூல்களை ஞானகூத்தன் எழுதியுள்ளார்.

1968ல் கவிதைகளை எழுத ஆரம்பித்த ஞானக்கூத்தன், நவீன கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவராவார். இவர் பிறப்பால் கன்னடர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது நல்லடக்கம்  திருவல்லிக்கேணியில் இன்று நடைபெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்