மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தமிழர் நியமனம்

🕔 July 2, 2016

Indrajit Coomaraswamy - 08லங்கை மத்திய வங்கியின்புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசாமி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இத்தகவல வெளியிட்டுள்ளது.

அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலம் கடந்த 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையிலேயே, மத்திய வங்கியின் 14 ஆவது ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார்.

மேலும் இங்கிலாந்து கழக அணி ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்தி இவர் இரண்டு முதல் தரப்போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த தமிழரான இந்திரஜித் குமாரசுவாமி ஒரு பொருளாதார நிபுணராவார். பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளராகவும் கடமையாற்றிருந்தார்.

1973ஆம் ஆண்டு இவர் இலங்கை மத்திய வங்கியில் இணைந்தார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள்

01) Mr. John Exter    ( 1950 to 1953 )
02) Mr. N.U. Jayawardena    ( 1953 to 1954 )
03) Mr. A.G. Ranasinha    ( 1954 to 1959 )
04) Mr. D.W. Rajapatirana    ( 1959 to 1967 )
05) Mr. W. Tennekoon    ( 1967 to 1971 )
06) Mr. H.E. Tennekoon    ( 1971 to 1979 )
07) Dr. W. Rasaputram    ( 1979 to 1988 )
08) Dr. H.N.S. Karunatilake    ( 1988 to 1992 )
09) Mr. H.B. Disanayaka    ( 1992 to 1995 )
10) Deshamanya A.S. Jayawardena    ( 1995 to 2004 )
11) Deshamanya Sunil Mendis    ( 2004 to 2006 )
12) Mr. Ajith Nivard Cabraal    ( 2006 to 2015 )
13) Mr. Arjuna Mahendran    26 January 2015 – 30 June 2016President's Twitter - 098

Comments

புதிது பேஸ்புக் பக்கம்