10 வயது 192 கிலோ; உலகில் பெரிய்ய்ய்ய குண்டுப் பையன்

🕔 July 1, 2016

Big Boy - 0122
லகிலேயே அதிக எடை கொண்ட சிறுவனாக, இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த – சூர்ய பெர்மானா எனும்  பெயருடைய சிறுவன் அறிவிக்கப்பட்டுள்ளான்.

தற்போது 10 வயதாகும் இச்சிறுவனின் எடை 192 கிலோ கிராமாகும்.

உடல் பருமன் காரணமாக இந்தச் சிறுவனால் நடக்க முடியவில்லை. அதனால் பாடசாலைக்கும் செல்வதில்லை.

தினமும் 05 வேளை சாப்பிடும் இந்தச் சிறுவன் – அரிசி மற்றும் மாட்டிறைச்சி சூப் போன்ற உணவுகளையே விரும்பி உண்கிறான்.

இவனால் ஆடைகளை அணிய முடியவில்லை. 02 பேர் சாப்பிடும் உணவை இவன் ஒருவனே சாப்பிடுவதாகக் கூறப்படுகிறது.

பிறக்கும் போது 3.2 கிலோகிராம் எடையாக இருந்தபோதும், காலப்போக்கில் இந்தச் சிறுவனால் பசியை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அதிக அளவில் சாப்பிட்டு குண்டாகி விட்டான் என்று அவனின் தயாயார் கூறுகின்றார்.

எவ்வளவு முயன்றும் சிறுவனின் எடையை குறைக்க முடியவில்லை. சாதாரண விவசாயியான இந்தச் சிறுவனின் தந்தையால், சிறுவனின் எடையைக் குறைக்கும் பொருட்டு, செலவு செய்து வைத்தியம் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில், உலகிலேயே அதிக எடையுள்ள சிறுவன் என – இவன் அறிவிக்கப்பட்டிருக்கிறான்.Big Boy - 0121

Comments

புதிது பேஸ்புக் பக்கம்