நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு

🕔 June 4, 2016

Keerthi Thennakoon - 011லங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை மீண்டும் இழக்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக யானைக் குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு பிணை வழங்கப்பட்ட முறை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச ரீதியாக இலங்கை அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என, ஊழல் எதிர்ப்பு முன்னணி குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, எதிர்க்காலத்தில் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த தயாராவிருப்பதாகவும் ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஆலோசகர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் மாலை 06 மணிக்கு அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இவ்வாறு 06 மணிக்கு பின்னர் பிணை வழங்கப்பட்டமையானது அசாதாரன விடயம் என சுட்டிக்காட்டிய ஊழல் எதிர்ப்பு முன்னணியினர், அவர் எவ்வாறு பிணை தொகை செலுத்தியிருப்பார் என்பதில் தமக்கு சந்தேகம் நிலவுவதாகவும் கூறியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்