வடக்கு – கிழக்கு இணைக்கக் கூடாது; அரசியலமைப்பு நிபுணர்குழு பரிந்துரை

🕔 June 3, 2016

Ranil - 087டக்­கு மற்றம் கிழக்­கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என அர­சி­ய­ல­மைப்பு குறித்த யோச­னைகள் பெறும்  நிபுணர் குழு பரிந்­து­ரைத்­துள்ளது. மேலும், சிறு­பான்­மை­யினர் சார்பில் உப ஜனா­தி­பதி ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும் எனவும் அந்தக்குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்பில் மக்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட சுமார் 5000 க்கும் மேற்­பட்ட யோச­னை­க­ளி­லி­ருந்தே இந்த பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் சமூகம் சார்பில் பல தரப்­பு­க­ளாலும் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­களும் இதில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.

நாட்டில் பல­மா­தங்­க­ளாக   மக்­க­ளி­டையே  கருத்­துக்­க­ளையும் யோச­னை­க­ளையும் பெற்று வந்த நிபுணர் குழு நேற்று முன்தினம் புதன்கிழகமை தனது அறிக்­கையை வெளி­யிட்­டது.   340 பக்­கங்­களைக் கொண்ட இந்த அறிக்­கையில்  47 தொடக்கம் 79ஆம் பக்கம் வரை இனப்பி­ரச்­சினை தீர்வு தொடர்­பான விடயம் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

அதில்  மேலும்  முன்­வைக்­கப்­பட்­டுள்ள விதப்­பு­ரைகள் வரு­மாறு, இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வாக  மாகா­ண ­ச­பை­களின்  முத­ல­மைச்­சர்கள் மற்றும் பிர­தி­நி­திகள் உள்ளிட்ட  75 பேர் அடங்­கிய செனட்  சபை­யொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்.

அந்த செனட்  சபை­யா­னது  பாரா­ளு­மன்­றத்தின் எதேச்­ச­தி­கார  செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக அமை­ய­ வேண்டும்.  மேலும் சிறு­பான்மை சமூ­கத்தை சேர்ந்த ஒருவர் உப ஜனா­தி­ப­தி­யாக பாரா­ளு­மன்­றத்­தினால்  தெரி­வு­செய்­யப்­ப­ட­வேண்டும்
மாகா­ணங்­க­ளுக்கு சிறி­ய­ள­வி­லான பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­க­வேண்டும்.

ஆனால், ஒவ்­வொரு மாகா­ணங்­க­ளுக்கும் சட்­டமா அதிபர்  ஒருவர் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­துடன்   பொலிஸ் ஆணைக்­கு­ழுவும் ஸ்தாபிக்­கப்­ப­ட­வேண்டும்.  காணி அதி­கா­ரங்­களைப் பகிர்­வதில் தேசிய  காணி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும்.  மாகாண ஆளு­நர்கள்  ஜனா­தி­பதி முத­ல­மைச்­சர்­களின் சம்­ம­தத்­துடன்  நிய­மிக்­கப்­ப­ட­வேண்­டும்.
அத்­துடன் தற்­போ­தைய  9 மாகா­ண­ ச­பை­களும் அவ்­வாறே நீடிக்­க­வேண்டும், வடக்­கையும் கிழக்­கையும் ஒரு­போதும் இணைக்­கக்­கூ­டாது. அவ்­வாறு    இணைப்­ப­தற்கு   சந்­தர்ப்பம் வழங்­கு­கின்ற   உறுப்­புரை 154A (3)  என்ற பிரிவு அகற்­றப்­ப­ட­வேண்டும்.  புதிய அர­சி­ய­ல­மைப்பில்  அவ்­வா­றா­ன­தொரு பிரிவை உள்­ள­டக்­கப்­ப­டக்­கூ­டாது.

செனட் சபை

இனப்­பி­ரச்­சி­னை தீர்வு விட­யத்தில் பல்­வேறு வகை­யான யோச­னைகள் எமக்கு கிடைத்­தன.  அந்­த­வ­கையில்  நாங்கள்  பல பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்ளோம். குறிப்­பாக  75 பேரைக்­கொண்ட  செனட் சபை உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்.

இதில் மாகா­ண ­ச­பை­களின் முத­ல­மைச்­சர்கள்    மற்றும் மாகா­ண ­ச­பை­க­ளி­லி­ருந்து தெரி­வு­செய்­யப்­படும் ஆறு பிர­தி­நி­திகள்  இடம்­பெ­ற­வேண்டும்.   இந்த மேல்­ச­பையில் தேசிய  சிறு­பான்­மை­யி­னரின் மொத்த பிர­தி­நி­தித்­துவம் பெரும்­பான்மை மக்கள் சமூக  பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு குறை­வாக இருக்­கக்­கூ­டாது.

இதில்   மூன்­றி­லொரு தரப்­பினர் பெண்­க­ளாக இருக்­க­வேண்டும்.  அத்­துடன் சிறு­பான்மை   சமூ­கத்­தி­லி­ருந்து   உப ஜனா­தி­ப­தி­யொ­ருவர்  தெரி­வு­செய்­யப்­ப­ட­வேண்டும்.

மாகாண சபைகள்

நாட்டின் 9 மாகா­ணங்­களின் முறைமை தொட­ர­ வேண்டும்.  எந்­த­வொரு மாகா­ணங்­களும் இன்­னொரு மாகா­ணத்­துடன் இணைக்­கப்­ப­டக்­கூ­டாது.  ஆகவே  அர­சி­ய­ல­மைப்பில்  154A  (3) ஆம் பிரிவு அகற்­றப்­ப­ட­வேண்டும்.  (எனினும் இந்த உறுப்­புரை அகற்­றப்­ப­டக்­கூ­டாது என்ற கருத்தும் நிபுணர் குழுவின்  சில அங்­கத்­த­வர்­க­ளினால் முன்வைக்­கப்­பட்­டது)

மாகா­ண­ மட்­டத்தில் அதி­கார   பேர­ளிப்­புக்­கான   அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பா­டு­க­ளுடன்   ஒன்­பது மாகா­ணங்கள் தொட­ர­வேண்டும்.   மேலும் அரு­க­ரு­கா­க­வுள்ள  மாகா­ணங்கள் மக்கள்  கருத்­துக்­க­ணிப்பு வாக்­கெ­டுப்பின் ஊடாக இயங்கும் வகையில்  தற்­போ­தைய ஒன்­பது மாகா­ணங்கள் தொட­ர­வேண்­டு­மென்றும்   நிபு­ணர்­கு­ழுவின் ஒரு­சில உறுப்­பி­னர்கள் பரிந்­துரை செய்­துள்­ளனர்.

ஒற்­றை­யாட்சி

ஒற்­றை­யாட்சி முறை­மையில்   அதி­கா­ரங்கள்  மத்­திய அர­சாங்­கத்­திடம் இருத்தல் வேண்டும். மத்­திய அர­சாங்கம் அதி­கா­ரங்­களை   மாகா­ணங்­க­ளுக்கு கைய­ளிக்­கலாம். ஆனால்   மாகா­ணங்­களின் சம்­பந்­த­மில்­லாமல் அதி­கா­ரங்­களை மீளப்­பெ­று­வ­தற்­கான உரிமை மத்­திய அர­சாங்­கத்­திற்கு இருக்­க­வேண்டும்.

மொழிசார் மாநிலம் வேண்டாம்

மேலும்  மொழி,  இனம்,  மதம்,  அல்­லது இனத்­துவ அடிப்­ப­டையில்  எந்த அதி­கார அளவும் உரு­வாக்­கப்­ப­டக்­கூ­டாது.

ஆளு­நர்கள்

மாகாண  ஆளு­நர்கள் முத­ல­மைச்­சரின் சம்­ம­தத்­துடன் ஜனா­தி­ப­தி­யினால்  நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். ஆளுநர்  முத­ல­மைச்­சரின் ஆலோ­ச­னை­யுடன் செயற்­ப­ட­வேண்டும். மாகா­ணத்தால் நிறை­வேற்­றப்­படும் சட்­ட­மூ­லங்­க­ளுக்கு   ஆளுநர்  இசைவு வழங்­க­வேண்­டு­மென்ற  அவ­சி­ய­மில்லை.

பொலிஸ் அதி­கா­ரங்கள்

ஒவ்­வொரு மாகா­ணத்­திற்கும்  பிராந்­திய வழக்­கு­ரை­ஞர்­நா­யகம்  நிய­மிக்­கப்­படல் வேண்டும்.   முழு­நாட்­டிற்கும்  ஒரு பொலிஸ் ­ப­டையே இருக்­க­வேண்டும். எவ்­வா­றா­யினும் மாகாண பொலிஸ் படை  மாகா­ணத்­தினுள்   சட்டம் ஒழுங்கை நிலை­நாட்டும் விட­யத்தில் முத­ல­மைச்­ச­ருக்கும்  அமைச்­சர்கள் சபைக்கும்  பொறுப்­புள்­ள­தாக இருக்­க­வேண்டும்.  தடுப்பு, விசா­ரணை, மற்றும் வழக்குத் தொடரல் விட­யங்­களில் மாகாண பொலிஸ் படை  மாகா­ணத்தின் அர­சியல்  செயற்­பாட்­டா­ளர்­க­ளி­லி­ருந்து  சுயா­தீ­ன­மாக கரு­ம­மாற்­றுதல் வேண்டும்.

வழக்குத் தொடுநர் நாயகம்

இந்த விட­யத்தில்  மாகா­ணத்­தி­லுள்ள  வழக்­குத்­தொ­டுநர்  நாயகம்  தடுப்பு விசா­ரணை மற்றும்  வழக்குத் தொடு­நர்­நா­யகம் பொறுப்­பாக இருப்பார்.

மாகாண பொலிஸ் ஆணைக்­குழு

மாகா­ண­பொலிஸ்  ஆணைக்­குழு ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அதில் ஆளு­நரால் நிய­மிக்­கப்­படும்    முத­ல­மைச்­சரின் பிர­தி­நி­தி­யொ­ருவர், தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் பிர­தி­நி­தி­யொ­ருவர் நிய­மிக்­கப்­படல் வேண்டும்.

தேசிய காணி ஆணைக்­குழு

காணிகள் விட­யத்தில் தேசிய  காணி ஆணைக்குழு உருவாக்கப்படவேண்டும்.   தேசிய  காணி ஆணைக்குழுவானது  முதலமைச்சர்கள்,  காணி, நீர்ப்பாசனம், மகாவலி, மற்றும் நகர்புற அபிவிருத்தி போன்றவற்றிற்கு பொறுப்பான அமைச்சர்கள்,   சிங்கள, தமிழ், முஸ்லிம், மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அரசியலமைப்பு . பேரவையில் விதத்துரைப்பின் பேரில்  ஜனாதிபதியினால்  நியமிக்கப்படும் நான்கு அங்கத்தவர்கள்  ஆகியோரை   உறுப்பினர்களாக கொண்டிருக்கவேண்டும்.

எவ்வாறெனினும்  நிபுணர் குழுவில் உள்ள  இரண்டு உறுப்பினர்கள் மாகாணத்திலுள்ள அரசகாணிகள், மாகாணத்திலுள்ள சட்டவாக்க   மற்றும் நிறைவேற்ற சபையினால் கையளாப்பட வேண்டுமென யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: விடிவெள்ளி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்