அனுஷவின் நியமனம் தொடர்பில் கண்டனம்

🕔 May 24, 2016

Anusha palptta - 098ள்விவகார அமைச்சின் மேலதிக செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ‘கபே’ அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளராக, கடந்த ஆட்சியில் இவர் பதவி வகித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு மோடிசகளுடன் தொடர்புபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் – அமுலுக்கு வரும் வகையில், உள்விவகார அமைச்சின் மேலதிக செயலாளராக, அனுஷ மியமிக்கப்பட்டுள்ளார் என்று உள்நாட்டு நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய ஆட்சியில் 600 மில்லியன் ரூபாய் சீல் துணி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரும், 2015ம் ஆண்டு தேர்தல் காலப்பகுதியில் இடம்பெற்ற அச்சுறுத்தல்கள், பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை போன்றவற்றுடன் தொடர்புபட்டவர் எனவும் கருதப்பபடுகின்ற அனுஷவுக்கு வழங்கப்பட்ட இந்த நியமனம் குறித்து ‘கபே’ அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் – அனுஷ பெல்பிட்ட பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்