தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் 07 மணி நேரம் விசாரணை

🕔 May 20, 2016

Thajudeen - 01க்பி வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு குழுவினர் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சுமார் 07 மணிநேரம் இடம்பெற்ற நேற்றைய விசாரணைகளின் போது, வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் குற்றத்தை மறைத்தமை, சாட்சிகளை அழித்தமை, விசாரணைகளை நிறுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன்படி, முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் வழங்கிய வாக்குமூலங்களுக்கு அமைவாகவே அனுர சேனநாயக்கவிடம் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் முதன்முறையாக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, அன்றைய தினம் இரவு 11.30 மணி வரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு ஏழு மணிநேரம் விசாரணைக்கு உட்டுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்