முஷர்ரப்பின் இடைநிறுத்தம் தொடர்பில், வசந்தம் நிருவாகத்துடன் பேசினேன்: முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அமீன் தகவல்

முஷர்ரப்பின் இடைநிறுத்தம் தொடர்பில், வசந்தம் நிருவாகத்துடன் பேசினேன்: முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அமீன் தகவல்

 – புதிது செய்தியாளர் – வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் முஷர்ரப், அந்த தொலைக்காட்சியில் காலை வேளையில் இடம்பெறும் செய்தித்தாள் கண்ணோட்ட நிகழ்ச்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், வசந்தம் தொலைக்காட்சி நிருவாகத்துடன் தான் பேசியதாகவும், விரைவில் அந்த விவகாரம் தொடர்பில் சாதகமான நடவடிக்கையொன்றினை எடுப்பதாக நிருவாகம் தன்னிடம் கூறியதாகவும், முஸ்லிம் மீடியோ போரம் அமைப்பின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான

மேலும்...
ரவி மீண்டும் அமைச்சராகிறார்

ரவி மீண்டும் அமைச்சராகிறார்

புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. தான் முன்னர் வகித்த நிதியமைச்சுப் பதவியையே மீண்டும் தனக்கு வழங்குமாறு ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ள போதும், அவருக்கு சுற்றுலா அபிவிருத்தி அல்லது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சுக்களில் ஒன்று வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. புதிய அமைச்சரவை இன்று

மேலும்...
மாந்தையை வென்றது மக்கள் காங்கிரஸ்; தமிழருக்குத் தலைமை கொடுத்தார் றிசாட் பதியுதீன்

மாந்தையை வென்றது மக்கள் காங்கிரஸ்; தமிழருக்குத் தலைமை கொடுத்தார் றிசாட் பதியுதீன்

  மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபையை, வரலாற்றில் முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சபையின் முதல் அமர்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) 15 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். யானை சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள்

மேலும்...
ஏழு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

ஏழு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

ஏழு மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்த வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஆளுநர்களின்பெயர் விபரங்கள் பின்வருமாறு ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம் கே.சி.லோகேஸ்வரன் – வடமேல் மாகாணம் திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம் ரெஜினோல்ட் குரே

மேலும்...
சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள், பதவிகளைத் துறப்பதாக அறிவிப்பு

சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள், பதவிகளைத் துறப்பதாக அறிவிப்பு

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும், அரசாங்கத்தின் சகல பொறுப்புக்கள் மற்றும் பதவிகளிலிருந்தும் விலகுவதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை இன்று புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு ஜனாதிபதியிடம் தாங்கள் அனுமதி

மேலும்...
06 அமைச்சர்கள் எதிரணிக்கு வருகிறார்கள்: 19ஆம் திகதி நடக்கும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

06 அமைச்சர்கள் எதிரணிக்கு வருகிறார்கள்: 19ஆம் திகதி நடக்கும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவுள்ளனர் என்று, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும், மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தின்  அடுத்த அமர்வின்போது எதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர்

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர்

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் முஷர்ரப், அந்தத் தொலைக்காட்சியில் நடத்தி வந்த, ‘சுயாதீனப் பார்வை’ எனும் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து, மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய தலையீட்டின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த நிகழ்ச்சியில் பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பற்றி, பத்திரிகைகளில் வெளிவந்த

மேலும்...
முசலி பிரதேச சபை; ஆட்சி பீடமேறியது மக்கள் காங்கிரஸ்

முசலி பிரதேச சபை; ஆட்சி பீடமேறியது மக்கள் காங்கிரஸ்

  முசலி பிரதேச சபையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது. மன்னார் மாவட்டம் – முசலி பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் போன்ற பதவிகளுக்கு நபர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதில், அகில

மேலும்...
போதிய அனுபவமின்றி பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியதால், தவறிழைத்து விட்டேன்: மன்னிப்பு கோரினார் ஸக்கர்பர்க்

போதிய அனுபவமின்றி பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியதால், தவறிழைத்து விட்டேன்: மன்னிப்பு கோரினார் ஸக்கர்பர்க்

பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் திருடியமை தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்ததோடு, அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பும் கோரினார். அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போலியான செய்திகளை பரப்பிவிட்டமை மற்றும் அந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பவை உள்ளிட்ட கடினமான கேள்விகளை, மார்க் ஸக்கர்பர்க்கிடம்

மேலும்...
அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு

அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு

புதிய அமைச்சரவை அடுத்த இரண்டு தினங்களில் பதவியேற்கும் என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ளது அமைச்சரவை மாற்றம் அல்ல எனவும், புதிய அமைச்சரவையாக அறிவிக்கப்படும் எனவும் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்;

மேலும்...