நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை

– முகம்மது தம்பி மரைக்கார்- மதமும் அரசியலும் மனிதனை மிக இலகுவாகவும், கடுமையாகவும் உணர்ச்சி வசப்படுத்தி விடுபவை. இந்த இரண்டின் பெயரில்தான் உலகில் அதிக குழப்பங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன. அரசியல் என்பது நாகரிகமடைந்த ஒரு சமூகத்தின் அடையாளமாகும். மதங்கள் என்பவை, மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவானவையாகும். ஆனால், இந்த இரண்டின் பெயராலும் உணச்சியின் உச்சத்துக்குச் சென்று,

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக சம்மாந்துறை வளாகத்தின் முன்பாக, அடையாள வேலை நிறுத்தம்

தெ.கி.பல்கலைக்கழக சம்மாந்துறை வளாகத்தின் முன்பாக, அடையாள வேலை நிறுத்தம்

– எம்.வை. அமீர் – பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றக்கோரி இன்று புதன்கிழமை காலை 11 மணிமுதல்  12 மணிவரை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தி, சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் பிரதான  நுழைவாயிலில் முன்பாக அடையாள வேலைநிறுத்தம் இடம்பெற்றது. 01) மாதாந்த வாழ்க்கைப் படி  கொடுப்பனவு 05 வருடத்துக்குள் 100% வரை அதிகரித்துக்கொள்வதற்கான இணக்கப்பாட்டுக்கு

மேலும்...
அஷ்ரப் மரண அறிக்கை வழங்கப்படாமை தொடர்பில், சுவடிகள் கூடம் மீது, தகவல் அறிவும் ஆணைக்குழு குற்றச்சாட்டு: பசீர் தகவல்

அஷ்ரப் மரண அறிக்கை வழங்கப்படாமை தொடர்பில், சுவடிகள் கூடம் மீது, தகவல் அறிவும் ஆணைக்குழு குற்றச்சாட்டு: பசீர் தகவல்

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதிக்கிடையில் தேடி வழங்குமாறு, தேசிய சுவடிக் கூடத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு பணித்துள்ளதாக, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதவூத் தெரிவித்தார். அஷ்ரப்பின் மரணம்

மேலும்...
புலிகளின் இலட்சனையுடன், சமூக வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்தவர்களுக்கு விளக்க மறியல்

புலிகளின் இலட்சனையுடன், சமூக வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்தவர்களுக்கு விளக்க மறியல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் இலட்சினையுடன், புத்தாண்டு வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று புதன்கிழமை சற்று முன்னர் மேற்படி உத்தரவினை வழங்கியுள்ளது.

மேலும்...
கடலில் கடத்திய 05 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகள்; கடற்படையினரிடம் சிக்கின

கடலில் கடத்திய 05 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகள்; கடற்படையினரிடம் சிக்கின

– பாறுக் ஷிஹான் – தங்கக் கட்டிகளை சிறிய படகு ஒன்றில் கடத்துவதற்கு முயற்சித்தவர்களை, நேற்றிரவு காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து, கடற்படையினர் கைது செய்துள்ளனர். படகிலிருந்த மீன் வலைகளில் சூட்சுமமாக மறைக்கப்பட்ட நிலையில் 70 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் இருவர் மேற்படி படகில் இருந்ததாகவும், ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர், அந்தப்

மேலும்...
வாக்களிப்பதற்காக விசேட தேவையுடையோர், உதவியாளரைப் பெற்றுக் கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு

வாக்களிப்பதற்காக விசேட தேவையுடையோர், உதவியாளரைப் பெற்றுக் கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில்,  பார்வையிழந்தவர்கள் உள்ளிட்ட விசேட தேவையுடையவர்கள் வாக்களிக்கும் பொருட்டு, மற்றொருவரின் உதவியினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு உதவி வழங்குகின்றவர் வேட்பாளராகவோ அல்லது கட்சிகள் சார்ந்த வாக்களிப்பு நிலைய முகவராகவே இருக்கக் கூடாது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், உதவியளிப்பவர் 18 வயதை நிறைவு செய்தவராகவும் இருத்தல்

மேலும்...
முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடங்களை, அரசியலமைப்பில் சுதந்திரக் கட்சி அனுமதிக்காது: ஹிஸ்புல்லா உறுதி

முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடங்களை, அரசியலமைப்பில் சுதந்திரக் கட்சி அனுமதிக்காது: ஹிஸ்புல்லா உறுதி

சிறுபான்மையினருக்கு பாதிப்பான அரசியலமைப்பு முன்மொழிவுகளை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதியளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;“அரசியலமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவை

மேலும்...
விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு, சடுதியாகக் குறைப்பு

விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு, சடுதியாகக் குறைப்பு

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏழு பேராக இருந்த அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 02ஆக குறைக்கப்பட்டுள்ளது. விஜேதாஸ ராஜபக்ஷவிடமிருந்து நீதியமைச்சு பறிக்கப்பட்டபோது, அவரின் பாதுகாப்பு கடமைக்காக பொலில் பரிசோதகர் ஒருவர், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர்,

மேலும்...
சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம்

சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம்

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சாய்ந்தமருது மக்களுக்குப் பயந்து சம்மாந்துறை ஊடாக மருதமுனைக்கு சென்ற சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மருதமுனையில் ஏற்பாடாகியிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார். இதனை அறிந்து

மேலும்...
ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

– அஹமட் – ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் அணியை எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, தனது அணியினை களமிறக்கியிருக்கும் தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி, ஹாபிஸ் நசீரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...

பின் தொடருங்கள்