Back to homepage

அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள்

அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள் 0

🕔1.Feb 2024

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினை அடுத்து, அதிகளவான  கணையான் மீன்கள், அங்குள்ள ஆறு, குளங்களில் பிடிபடுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக, நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் பெருமளவான கணையான் மீன்கள் கிடைக்கின்றன. அம்பாறையிலுள்ள சேனநாயக்க சமுத்திரத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, பெருமளவான

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு 0

🕔1.Feb 2024

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் சனி (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (11) நடைபெறவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா  தலைமையில், இரண்டு நாட்களும் தலா 03 அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார். முதலாவது நாளின்

மேலும்...
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு 0

🕔1.Feb 2024

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு சேர்ச் ஃபோ கொமண்ட் கிறவுண்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையில், அதன் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக்கான சிரேஷ்ட முகாமையாளர் எம்.ஐ.எம். சதாத் தலைமையில் – அம்பாறையிலுள்ள தனியார் விடுதியொன்றில் அண்மையில் நடைபெற்றது. கடந்த 04 வருடங்களாக சேர்ச் ஃபோ கொமண்ட்

மேலும்...
நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு

நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு 0

🕔31.Jan 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனை நகரில் ‘எம்.எஸ். காரியப்பர் வீதி’  என பெயரிடப்பட்ட நினைவுக் கல்லை  உடைத்துத் தரை மட்டமாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதிவாதியான  ரெலோ இயக்கத்தின் முன்னாள் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய  ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை

மேலும்...
தமிழரசுக் கட்சியின் உயர் பதவிகளுக்கான தெரிவு தொடர்பில், கல்முனைக் கிளை அறிக்கை

தமிழரசுக் கட்சியின் உயர் பதவிகளுக்கான தெரிவு தொடர்பில், கல்முனைக் கிளை அறிக்கை 0

🕔29.Jan 2024

– பாறுக் ஷிஹான் – தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் – புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 21 ம் திகதி வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் –

மேலும்...
‘நம்மவரைக் கொண்டாடுவோம்’: ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஹனீபா, சமூக சேவையாளர் சமீர் மற்றும் சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கெளரவமும் பாராட்டும்

‘நம்மவரைக் கொண்டாடுவோம்’: ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஹனீபா, சமூக சேவையாளர் சமீர் மற்றும் சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கெளரவமும் பாராட்டும் 0

🕔29.Jan 2024

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா மற்றும் சமூக சேவகரும் ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தருமான ஏ.சி.எம். சமீர் ஆகியோரை கௌரவித்து, அண்மையை வெள்ள அனர்த்தத்தின் போது – பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வத்துடன் உணவுகள் சமைத்து வழங்கி உதவிய சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு

“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு 0

🕔27.Jan 2024

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபரும் முன்னாள் பிரதேச செயலாளருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா அவர்களின் நற்பணியைக் கௌரவிப்பதோடு, அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – தன்னார்வத்துடன் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய ‘சேனையூர் இளைஞர் அமைப்பு’ உறுப்பினர்களை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நம்மவரைக் கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வு நாளை (28)

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க, ஐ.தே.கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பை நடவடிக்கை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க, ஐ.தே.கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பை நடவடிக்கை 0

🕔23.Jan 2024

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதுடன், விவசாயிகளுக்கு நஷ்டஈட்டினையும் பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவுகளை – ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை – உரிய அமைச்சுக்களுக்கு கையளிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கிணங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின்

மேலும்...
லஞ்சம் பெற முயற்சித்த மருதமுனை அரச உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற முயற்சித்த மருதமுனை அரச உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔21.Jan 2024

– பாறுக் ஷிஹான் – தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை வழங்கும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா  லஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்கள  உத்தியோகத்தர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு  நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (19) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, சந்தேக நபரை

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை Zoom ஊடாக நடத்த தீர்மானம்

தெ.கி.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை Zoom ஊடாக நடத்த தீர்மானம் 0

🕔19.Jan 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இம்மாதம் 22ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை – Zoom தொழில்நுட்பத்தின் மூலம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் கல்வி நடடிக்கைகள் இம்மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்தி

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் தெரிவு: பொருத்தமற்றவர் யார் என்பது தொடர்பில் கவனமாக இருப்போம்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் தெரிவு: பொருத்தமற்றவர் யார் என்பது தொடர்பில் கவனமாக இருப்போம் 0

🕔19.Jan 2024

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் நடப்பு நிர்வாகிகள் பதவி விலகியமையை அடுத்து, புதிய நிர்வாகத் தெரிவு – இன்று (19 வெள்ளிக்கிழமை) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பள்ளிவாசலின் தலைவர் பொறுப்பைப் பெற்றுக் கொள்வதற்காக சிலர் கடுமையாக முயற்சிக்கின்றனர். இம்முறை 13 குடிகளின் பிரதிநிதிகளில் இருந்து – பெரிய பள்ளிக்கான தலைவர் உள்ளிட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்படவுள்ளது.

மேலும்...
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நாடு பின்னடைவை சந்திக்கிறது: எஸ்.எம். சபீஸ்

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நாடு பின்னடைவை சந்திக்கிறது: எஸ்.எம். சபீஸ் 0

🕔18.Jan 2024

– நூருல் ஹுதா உமர் – பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நமது நாடு வேகமாக வளர்ச்சியடைவதில் பின்னடைவை சந்திப்பதாக கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். “வளர்ச்சி அடைந்த நாடுகளில் – பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அவர்களது தகமைக்கு ஏற்ப இணைத்துக் கொள்ளும்

மேலும்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் தலைமையில் பகலுணவு விநியோகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் தலைமையில் பகலுணவு விநியோகம் 0

🕔15.Jan 2024

– அபு அலா – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கான பகலுணவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், தொழிலதிபருமான ஏ.கே. அமீர் தலைமையில் இன்று திங்கட்கிழமை (15) வழங்கி வைக்கப்பட்டது. 2800 பேருக்கு உணவு சமைத்து பொதியிடப்பட்டு, இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச்

மேலும்...
உயர்தரப் பரீட்சை வினாத்தாளை கசிய விட்ட, அம்பாறை பாடசாலை ஆசிரியருக்கு விளக்க மறியல்

உயர்தரப் பரீட்சை வினாத்தாளை கசிய விட்ட, அம்பாறை பாடசாலை ஆசிரியருக்கு விளக்க மறியல் 0

🕔14.Jan 2024

நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்தின் பகுதி I மற்றும் பகுதி II வினாத்தாள்களின் கேள்விகள் – பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படுகின்றமை தொடர்பாக அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் க.பொ.த உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியர் ஒருவரை – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்தமையை அடுத்து, அவர்

மேலும்...
நீர் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணித்தமையால், ஆபத்தற்ற பகுதிகள் கூட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன: அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர்

நீர் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணித்தமையால், ஆபத்தற்ற பகுதிகள் கூட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன: அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் 0

🕔13.Jan 2024

அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் நீர் பிடிப்புள்ள பகுதிகளில் (Wetlands area) உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கட்டடங்களை நிர்மாணித்துள்ளவர்கள் என, அனர்த்த முகாமைததுவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார். இவ்வாறு அனுமதியின்றி – நீர்ப் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டமையால், ஆபத்தற்ற பகுதிகளாகக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்