Back to homepage

மட்டக்களப்பு

விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு

விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு 0

🕔1.Sep 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட, மாவட்ட மட்டபோட்டித் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இவ்வாண்டுக்கான அரச கலை விழாவினை நடத்துகின்றது. மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர்

மேலும்...
மட்டக்களப்பு கெம்பஸ் பாடநெறிகள் தொடர்பில், அமெரிக்க நிறுவன பிரதிநிதியுடன், ஹிஸ்புல்லா பேச்சு

மட்டக்களப்பு கெம்பஸ் பாடநெறிகள் தொடர்பில், அமெரிக்க நிறுவன பிரதிநிதியுடன், ஹிஸ்புல்லா பேச்சு 0

🕔25.Aug 2016

மட்டக்களப்பு கெம்பஸில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உல்லாசப் பயணத்துறை, முகாமைத்துவப் பட்டதாரி பயிற்சிகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும், அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் STR share center benchmarking நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜெஸ்பர் பாம் குயிட்ஸுக்கும் இடையில் இந்தக்

மேலும்...
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு, தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு, தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு 0

🕔24.Aug 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் நடைபெற்றது. பிரான்ஸ், சுவிஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளிலுள்ள புகலிடப் பெண்கள் சந்திப்பு நண்பிகளின் முழுமையான அனுசரனையுடன் இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டன. பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், திரைமறைவில் பேச்சுக்கள் நடைபெறுகின்றன: ஹிஸ்புல்லாஹ்

வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், திரைமறைவில் பேச்சுக்கள் நடைபெறுகின்றன: ஹிஸ்புல்லாஹ் 0

🕔22.Aug 2016

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கு மாகாணத்தை வட மாகாணத்தோடு இணைத்து முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.ஏறாவூர் பிரதேசத்தில் 500 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை காசோலையாகக் கையளிக்கும் நிகழ்வு ஆசிரியர் ஏ. றியாஸ் தலைமையில் நேற்று ஏறாவூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும்...
வடக்கு – கிழக்கை பிரித்த அதாஉல்லாஹ், ஓர் இனவாதி: மு.கா. கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்

வடக்கு – கிழக்கை பிரித்த அதாஉல்லாஹ், ஓர் இனவாதி: மு.கா. கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் 0

🕔18.Aug 2016

இணைந்திருந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரித்த, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் ஓர் இனவாதி என்று, மு.காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.எம் முபீன் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றவர்கள்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் குழப்பத்தை மூட்டிவிட்டனர் என்றும், முபீன் கூறினார். இடம்பெயர்ந்து அசையாச் சொத்துக்களை

மேலும்...
பத்து மாதம் கடந்தும் பிள்ளையானுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே வைக்க நீதிமன்றம் உத்தரவு

பத்து மாதம் கடந்தும் பிள்ளையானுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே வைக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Aug 2016

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் சந்தேக நபராகக் கைதுசெய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போதே, அவரை எதிர்வரும் 24 ஆம்

மேலும்...
சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு 0

🕔3.Aug 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ‘ஷூஹதாக்கள் தின’ நினைவாக, இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காத்தான்குடி ஹூஸைனியா சிறுவர் கல்லூரியில் இடம்பெற்றது. ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’  எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வினை, காத்தான்குடி

மேலும்...
மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு

மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு 0

🕔3.Aug 2016

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மாலை அணிவித்து, தன்னை வரவேற்கக் கூடாது என்று – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். உலமாக்களின் வழிகாட்டலின் பிரகாரமும், அவர்களின் மார்க்க அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், தான் – இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலேயே இந்த அறிவிப்பை ஷிப்லி பாறூக் விடுத்திருக்கின்றார். எனவே,

மேலும்...
ஹக்கீம் காசு வாங்கியிருந்தால், ஹசனலிக்கும் பங்கிருக்கும்: முழக்கம் மஜீத்

ஹக்கீம் காசு வாங்கியிருந்தால், ஹசனலிக்கும் பங்கிருக்கும்: முழக்கம் மஜீத் 0

🕔25.Jul 2016

மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், 18ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, பணம் பெற்றிருந்தால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும் என்று, அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான முழக்கம் மஜீத் தெரிவித்துள்ளார். ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இந் நிகழ்வில் கிழக்கு

மேலும்...
குளங்களைப் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

குளங்களைப் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔24.Jul 2016

– றியாஸ் ஆதம் – மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பதற்காக 2000 மில்லியன் ரூபா நிதியினை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜிதமுனி சொய்சா ஒதுக்கீடு செய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி – உறுகாமம் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் விஜயம் மேற்கொண்டார். இதன்போதே, இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின்

மேலும்...
ஜனாதிபதியின் ‘பெயரை’ அடித்து நொறுக்கிய பிக்கு; மட்டக்களப்பில் சம்பவம்

ஜனாதிபதியின் ‘பெயரை’ அடித்து நொறுக்கிய பிக்கு; மட்டக்களப்பில் சம்பவம் 0

🕔11.Jul 2016

ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக் கல் ஒன்றினை, மட்டக்களப்பு மங்களராம விஹாரையின் விஹாராதிபதி, அடித்து நொறுக்கியுள்ளார். மட்டக்களப்பு மங்களராம விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரி வருகை தரவில்லை என்கிற காரணத்தினால், ஆத்திமடைந்த அவ் விஹாரையின் விஹாராதிபதி, இவ்வாறு செயற்றபட்டுள்ளார். மட்டக்களப்பு உள்ளூர் விமான சேவையை ஆரம்பித்து வைப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரி நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; 08 மாதங்களாகியும் பிணையில்லை

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; 08 மாதங்களாகியும் பிணையில்லை 0

🕔22.Jun 2016

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திர காந்தனின் விளக்க மறியல் காலம் இன்றுடன் நிறைவடைகின்றமையினை அடுத்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது,

மேலும்...
ஆசிரியை தாக்கிய 10 வயது மாணவன், காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியை தாக்கிய 10 வயது மாணவன், காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி 0

🕔11.Jun 2016

ஆசிரியையொருவர்- தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கியதில், பாதிப்புக்குள்ளான மாணவர், காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்தான்குடியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சாக்கிர் ரஹ்மான் எனும் 10 வயதுடைய மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். பிரத்தியேக வகுப்பு நடைபெற்ற போதே மாணவன் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு

மேலும்...
இரும்புப் பேரூந்து வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்குக்கு பொருத்தமற்றது; எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு

இரும்புப் பேரூந்து வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்குக்கு பொருத்தமற்றது; எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு 0

🕔1.Jun 2016

– றியாஸ் ஆதம் –யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கப் போவதாக மீள் குடியேற்ற அமைச்சினால் முன்மொழியப்பட்ட 65 ஆயிரம் இரும்பு பேரூந்து வீட்டுத்திட்டமானது, எமது சூழலுக்குப் பொருத்தமற்றவை என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு, தேசிய வீடமைப்பு அதிகார சபையினால்

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔11.May 2016

பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்