Back to homepage

வட மாகாணம்

கிளைமோர் வெடிபொருட்கள், புலிகளின் சீருடை மற்றும் கொடி ஆகியவற்றுடன் பயணித்தவர்கள் கைது

கிளைமோர் வெடிபொருட்கள், புலிகளின் சீருடை மற்றும் கொடி ஆகியவற்றுடன் பயணித்தவர்கள் கைது

கிளைமோர் வெடிகுண்டுகள், புலிகள் அமைப்பின் ராணுவச் சீருடை மற்றும் புலிகளின் கொடிகள் ஆகியவற்றுடன் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த இருவரை, முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பகுதியில் பொலிஸார் கைது செய்தனர். இதன்போது மேற்படி பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். முச்சக்கர வண்டியில் மேற்படி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டபோது, பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் சந்தேக நபர்கள் சிக்கினர். இதன்போது

மேலும்...
மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்

– பாறுக் ஷிஹான்-மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் கலைஞருமான ‘மக்கள் காதர்’ என அழைக்கப்படும் எம்.ஏ. காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.இவர்  நீண்ட நாட்களாக சுகவீனம் அடைந்திருந்தார்.‘ஜனாசா’ நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர் வீதியில் இடம் பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாக

மேலும்...
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு, சிவாஜிலிங்கம் வீட்டில் இருந்த போது திடீர் மாரமைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும் தற்போது சிவாஜிலிங்கம்

மேலும்...
மாட்டிறைச்சி விவகாரம்: தமிழர் தரப்பு புத்தி ஜீவிகள் என்ன சொல்கிறார்கள்?

மாட்டிறைச்சி விவகாரம்: தமிழர் தரப்பு புத்தி ஜீவிகள் என்ன சொல்கிறார்கள்?

பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சில தினங்களுக்கு முன்னதாக பசுவதையை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். காவி உடையணிந்தவர்கள் உட்பட சிலர்

மேலும்...
மாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்

மாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியில், மரபுகளை மதிக்கத் தெரியாதவர்கள் நாட்டை விட்டு  வெளியேறுங்கள் என்று, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் குறித்து இவ்வாறு கூறியுள்ள சச்சிதானந்தன்; “சஊதி அரேபியாவில் பன்றி இறைச்சியை இந்துக்கள் உண்ண முடியுமா” எனவும் கேள்ளியெழுப்பியுள்ளார். மாடுகளைக் கொல்வதற்கு எதிராகவும், சாவகச்சேரியிலுள்ள மாடுகள் கொல்களத்தினை மூடிவிடும்படியும் வலியுறுத்தி

மேலும்...
மாந்தை மக்கள் நன்றியுடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்: அமைச்சர் றிசாட் நெகிழ்ச்சி

மாந்தை மக்கள் நன்றியுடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்: அமைச்சர் றிசாட் நெகிழ்ச்சி

  மாந்தை மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்த மூவின மக்களும் வாழ்வதால், இதன் நிருவாகத்தைப் பொறுப்பேற்றிருக்கும் புதிய சபையானது, மத நல்லிணக்கத்துடன் கூடிய பிரதேசமாக இதனை மாற்றி, இன உறவுக்கு முன்னுதாரணம் மிக்க சபையாகத் திகழ வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர்

மேலும்...
கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம்

கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம்

  -சுஐப் எம்.காசிம்-   வடக்கிலுள்ள மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள 14 உள்ளுராட்சி சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றுவதற்காக சாத்தியங்கள் இருந்ததாகவும், அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக்

மேலும்...
வடக்கு – கிழக்கு கோரிக்கையை த.தே.கூட்டமைப்பு கைவிடவில்லை: சுமந்திரன்

வடக்கு – கிழக்கு கோரிக்கையை த.தே.கூட்டமைப்பு கைவிடவில்லை: சுமந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்கிற தமது கோரிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கைவிடவில்லை என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்

மேலும்...
புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்கள், நவீன கருவிகளுடன் வவுனியாவில் சிக்கினர்

புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்கள், நவீன கருவிகளுடன் வவுனியாவில் சிக்கினர்

புலிகள் அமைப்பினர் புதைத்து வைத்தாகக் கூறப்படும் தங்கத்தை கண்டறிவதற்காக, அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் கருவிகளை எடுத்துச் சென்ற 08 பேர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த வேன் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும்...
ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு

ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு

கிளிநொச்சியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில், கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.விடுதலை புலிகளிகளினால் தயாரிப்பிக்கப்பட்ட ‘தமிழன் குண்டு’ என பெயர் குறிப்பிடப்படும் கைகுண்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செலகப்பிரிவிலுள்ள பிராந்திய ஊடகவியலார் ஒருவரின் வீட்டின் முற்றத்தின் அருகில், மேற்படி குண்டு நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.பொலிஸாருக்கு  இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்