Back to homepage

பிரதான செய்திகள்

பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கேற்க, அமைச்சர் றிசாட் குழுவினர் லண்டன் பயணம்

பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கேற்க, அமைச்சர் றிசாட் குழுவினர் லண்டன் பயணம் 0

🕔9.Apr 2018

  லண்டனில் இடம்பெறும் பொதுநலவாய வர்த்தக அமைப்பின் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான 50 பேர் கொண்ட வர்த்தக தூதுக்குழுவினர், அடுத்தவாரம் பிரித்தானியா பயணமாகின்றது. 1997ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைப்பின் கூட்டம் இம்முறையே முதன்முதலாக லண்டனில் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து என்றுமில்லாத

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்: அர்ஜுன ரணதுங்க

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்: அர்ஜுன ரணதுங்க 0

🕔9.Apr 2018

“பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக நான் வாக்களித்திருந்தால், அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருந்திருக்க மாட்டேன்” என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். குருணாகல் வெலிகதர மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். “தோற்கடிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையானது ஒன்றிணைந்த எதிரணியினருக்குத் தேவையாக

மேலும்...
பிரதமர் பதவியை நிராகரித்தேன்:  அமைச்சர் ராஜித

பிரதமர் பதவியை நிராகரித்தேன்: அமைச்சர் ராஜித 0

🕔9.Apr 2018

நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டமையை தான் நிராகரித்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அளுத்தகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதே அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு, தான் உழைப்பேன் எனவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல்

மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல் 0

🕔9.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று அமர்ந்து கொள்வார்கள் என ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி பெற வேண்டுமாயின் எந்த நிபந்தனைகளாக இருந்தாலும் அதனடிப்படையில், மஹிந்த

மேலும்...
சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு 0

🕔9.Apr 2018

கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண தொடண்டர் ஆசிரியர் சங்கம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்தது.அமைச்சரை நேற்று  ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் சந்தித்து இந்த கோரிக்கையினை சங்கத்தினர் முன்வைத்தனர்.இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை

மேலும்...
ஐ.தே. கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து, மலிக் சமரவிக்ரம ராஜிநாமா

ஐ.தே. கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து, மலிக் சமரவிக்ரம ராஜிநாமா 0

🕔8.Apr 2018

அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் தவிசாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் கையளித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிமும், கடந்த வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார். ஐக்கிய

மேலும்...
‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு

‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு 0

🕔8.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியினால் இணைந்து செயற்பட முடியாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு

மேலும்...
ஒவ்வொரு உறுப்பினருக்கும் 05 கோடி ரூபாய்: பிரதமர் லஞ்சம் வழங்கியதாக, அமைச்சர் தயாசிறி குற்றச்சாட்டு

ஒவ்வொரு உறுப்பினருக்கும் 05 கோடி ரூபாய்: பிரதமர் லஞ்சம் வழங்கியதாக, அமைச்சர் தயாசிறி குற்றச்சாட்டு 0

🕔8.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பதற்காக பெருந்தொகை பணத்தை லஞ்சமாக வழங்கினார் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார். ஊடகமொன்று வழங்கியுள்ள நேர்காணலொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க – தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும்பொருட்டு, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க, நாடாளுமன்ற

மேலும்...
சிரியாவில் விச வாயுத் தாக்குதல்; 70 பேர் பலி: அரச படை மீது குற்றச்சாட்டு

சிரியாவில் விச வாயுத் தாக்குதல்; 70 பேர் பலி: அரச படை மீது குற்றச்சாட்டு 0

🕔8.Apr 2018

சிரியாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் ஆகக்குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிரிய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில், நேற்று சனிக்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிய படையினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றபோதும், தன் மீதான

மேலும்...
ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம்

ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம் 0

🕔8.Apr 2018

– மப்றூக் – ஏறாவூர் நகர சபையை கைப்பற்றுவதற்காக, முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர், அவரின் ஆட்கள் மூலம் எதிரணி உறுப்பினர்களை விலை பேசியமை அம்பலமாகியுள்ளது. ஏறாவூர் நகர நகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது – ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்

மேலும்...
சன நெரிசலுக்குள் வேன் புகுந்ததால் பலர் மரணம்; சாரதி தற்கொலை: ஜேர்மனில் துயரம்

சன நெரிசலுக்குள் வேன் புகுந்ததால் பலர் மரணம்; சாரதி தற்கொலை: ஜேர்மனில் துயரம் 0

🕔7.Apr 2018

ஜேர்மன் – முன்ஸ்டர் நகரில் மக்கள் கூட்டத்துக்குள் வேன் ஒன்று புகுந்து மோதியதில் ஆகக்குறைந்தது 04 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 30 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை அடுத்து, வாகனத்தை செலுத்திய சாரதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், இது ஒரு பயங்காரவாதத் தாக்குதலாக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
ஐ.தே.க. தலைமைத்துவத்தில் மாற்றம் தேவையில்லை; கட்சியின் செயற்குழு தீர்மானம்

ஐ.தே.க. தலைமைத்துவத்தில் மாற்றம் தேவையில்லை; கட்சியின் செயற்குழு தீர்மானம் 0

🕔7.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் தற்போது மாற்றம் செய்யத் தேவையில்லை என்று, அந்தக் கட்சியின் செயற்குழுவிலுள்ள பெரும்பான்மையோர் தீர்மானத்துள்ளனர் என்று, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பதவிகளில் மாற்றங்களைச் செய்வதற்கான சிபாரிசுகளை வழங்கும் பொருட்டு, அந்தக் கட்சியைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் மற்றும் 03 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய

மேலும்...
தம்மை பதவி விலக்குமாறு, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

தம்மை பதவி விலக்குமாறு, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் 0

🕔7.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தம்மை பதவி விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடிதமொன்றின் ஊடாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். அமைச்சர் தயாசிறி ஜயசேகர மூலம் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியைச்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு இணக்கம்

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு இணக்கம் 0

🕔7.Apr 2018

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதிகளவானோர் இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர். மேலும், ஒரே தினத்தில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை நடத்துவதற்கும் இதன்போது இணக்க்கம் காணப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம்

மேலும்...
மு.காங்கிரஸ் பணம் பெற்றதாக செய்தி பரப்பியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: சபையில் பைசால் காசிம் கோரிக்கை

மு.காங்கிரஸ் பணம் பெற்றதாக செய்தி பரப்பியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: சபையில் பைசால் காசிம் கோரிக்கை 0

🕔7.Apr 2018

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய ராகித ராஜபக்ஷவின் பேஸ்புக் கணக்கை விசாரணைக்குட்படுத்தி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் இந்த தகவலை மேற்கோள்காட்டி அவதூறு பரப்பிய இணையத்தளங்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்