Back to homepage

பிரதான செய்திகள்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் ராஜிநாமா

ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் ராஜிநாமா 0

🕔14.May 2018

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை, ரவி ஜயவர்தன ராஜினாமா செய்துள்ளார். நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஒப்படைத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களினால் தாம் பதவியை ராஜினாமா செய்வதாக ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத் தலைவரும் தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என அறிய

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔13.May 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் பதவிக்கு, அந்தப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் விண்ணப்பித்துள்ளமையினால், அவரை பதில் உபவேந்தராக நியமிக்கக் கூடாது என, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் ஒருவரை நியமிப்பதற்கான காலத்தை, தற்போதைய உபவேந்தர் இழுத்தடிப்புச் செய்து வருவதாகவும்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர், அம்பாறை நகர சபையின் பிரதி தவிசாளரானார்

முஸ்லிம்கள் மீதான கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர், அம்பாறை நகர சபையின் பிரதி தவிசாளரானார் 0

🕔13.May 2018

அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள துலீப் குமாநாயக்க என்பவர், அம்பாறை நகர சபையின் பிரதித் தவிசாளராகத் தெரிவாகியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ சார்பான – தாமரை மொட்டு சின்னத்தைக் கொண்ட – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில்  போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம்,

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம்

தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம் 0

🕔13.May 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்களை, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அநாகரீமான முறையில் வழிமறித்த காவலாளர்கள், உள்ளே நுழைய விடாமல் திருப்பியனுப்பிய சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, காவலாளிகளின் அநாகரீக செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் தமது விசனத்தை அங்கு

மேலும்...
தெ.கி.பல்லைக்கழக விரிவுரையாளர் அன்சார் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு

தெ.கி.பல்லைக்கழக விரிவுரையாளர் அன்சார் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு 0

🕔13.May 2018

– எம்.வை. அமீர்- தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.ஆர். முகம்மட் அன்சார் எழுதிய மூன்று ஆங்கில நூல்களை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா மெகா ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதன் தலைவர் ஏ.எம். அஹுபறின் தலைமை தாங்கினார். சட்டம் ஒழுங்கு மற்றும்

மேலும்...
ஈரான் ஜனாதிபதியை மைத்திரி சந்தித்தார்

ஈரான் ஜனாதிபதியை மைத்திரி சந்தித்தார் 0

🕔13.May 2018

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளார். ஈரானுக்கான இரண்டு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன நேற்று சனிக்கிழமை ஈரான் பயணமானார். இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் இந்த விஜயம் அமைந்துள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இச்சந்திப்பின்போது

மேலும்...
கண்டி வன்முறை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 151 பேர் முறைப்பாடு

கண்டி வன்முறை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 151 பேர் முறைப்பாடு 0

🕔12.May 2018

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுமார் 100 பேர்  தங்கள் வாக்குமூலங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் நேரடியாக பதிவு செய்துள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். கண்டி  வன்முறைச்சம்பவங்கள் குறித்த சி.சி.ரி.வி. வீடியோ பதிவுகளை இலங்கை மனித உரிமைகள்

மேலும்...
தொண்டராசிரியர் தகுதிப் பட்டியலில் முறைகேடு; முழுமையான விபரத்தை  வெளியிடுமாறு வேண்டுகோள்

தொண்டராசிரியர் தகுதிப் பட்டியலில் முறைகேடு; முழுமையான விபரத்தை வெளியிடுமாறு வேண்டுகோள் 0

🕔12.May 2018

– அகமட் –கிழக்கு மாகாண கல்வியமைச்சு வெளியிட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர நியமனம் செய்யும் பட்டியலில் குளறுபடிகள் மற்றும் தெளிவின்மைகள் காணப்படுவதாக கல்வியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இவற்றை திருத்தியமைத்து வெளிப்படைத் தன்மையுடன் அனைத்து விபரங்களும் அடங்கியபெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.கிழக்கு மாகாணத்தில் பல வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்

மேலும்...
ஜனாதிபதியிடம் நான் மன்னிப்புக் கோரவில்லை; அரசியல்வாதிகள் எவருக்கும் தலை வணங்கப் போவதுமில்லை: சரத் பொன்சேகா தெரிவிப்பு

ஜனாதிபதியிடம் நான் மன்னிப்புக் கோரவில்லை; அரசியல்வாதிகள் எவருக்கும் தலை வணங்கப் போவதுமில்லை: சரத் பொன்சேகா தெரிவிப்பு 0

🕔12.May 2018

ஜனாதிபதியிடம் – தான் மன்னிப்புக் கோரியதாக வெளிவந்த செய்தியினை அமைச்சர் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். எந்தவொரு அரசியல்வாதியிடமும் மன்னிப்புக் கோரப்போவதுமில்லை, அவர்களுக்கு தலை வணங்கப் போவதுமில்லை என்று, நேற்று வெள்ளிக்கிழமை அவர் தெரிவித்தார். ஹொரவபொத்தானை சென்றிருந்த அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களிடம் இந்த விடயங்களைக் கூறினார். “சரத் பொன்சேகா எனும் நபர் பெற்றோர்களையும், மதத்தலைவர்களையுமே தனது வாழ்நாளில்

மேலும்...
விளையாட்டு பயிற்சியாளர் நியமனம் விரைவில்; கல்வியமைச்சரை சந்தித்த பின்னர், இம்ரான் தெரிவிப்பு

விளையாட்டு பயிற்சியாளர் நியமனம் விரைவில்; கல்வியமைச்சரை சந்தித்த பின்னர், இம்ரான் தெரிவிப்பு 0

🕔12.May 2018

நேர்முகப்பரீட்சையை முடித்த விளையாட்டு பயிற்சியாளர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இந்நியமனம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “விளையாட்டில் திறமைகாட்டும் பல மாணவர்களுக்கு அரச தொழில்

மேலும்...
சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தோண்டும் பெருமிதக் குழி

சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தோண்டும் பெருமிதக் குழி 0

🕔11.May 2018

– பஷீர் சேகுதாவூத் – எந்தச் சிறுபான்மையினரதும் வாக்குகளின்றி, தனியே சிங்கள வாக்குகளால் மாத்திரம் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குச் சிங்களவர்களை, சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் கொண்டுவந்துவிடுவார்கள் போல் தெரிகிறது. மலையகத் தமிழ் மக்களின் தலைவர்களும், இலங்கைத் தமிழர் தலைவர்களும், இலங்கை முஸ்லிம் தலைவர்களும் தத்தமது இன மக்களின் வாக்குகள் இல்லாமல்

மேலும்...
ஆலயடிவேம்பு பிரதேச சபை: குறவர் சமூகத்திலிருந்து, ஒரு பிரதித் தவிசாளர்

ஆலயடிவேம்பு பிரதேச சபை: குறவர் சமூகத்திலிருந்து, ஒரு பிரதித் தவிசாளர் 0

🕔11.May 2018

ஏராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன். இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங்கு பேசும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெகன். ஜெகன் இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அலிக்கம்பைக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு,

மேலும்...
வில்பத்துவை நாங்கள் அழித்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்; அமைச்சர் பொன்சேகாவிடம் றிசாட் வேண்டுகோள்

வில்பத்துவை நாங்கள் அழித்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்; அமைச்சர் பொன்சேகாவிடம் றிசாட் வேண்டுகோள் 0

🕔11.May 2018

வில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதும் இனவாதிகள் கூறும் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து, இது தொடர்பிலான உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம் 0

🕔11.May 2018

– மப்றூக் – அட்டாளைசச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், தனது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்குத்  தெரிவித்தார். இதேவேளை, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மூன்றாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்சில்; “இது எனது இறுதி அமர்வாகும்” எனத்

மேலும்...
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக பௌசி நியமனம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக பௌசி நியமனம் 0

🕔11.May 2018

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவும் பிரசன்னமாகியிருந்தார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சராக மனோ கணேசனும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்