Back to homepage

பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு

அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு 0

🕔5.Jun 2018

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் வடக்கு வீதி நிர்மாணம் மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு முறையிடப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழு எனும் அமைப்பு, எழுத்து மூலம் இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டின் பிரதியொன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் 2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட

மேலும்...
நல்லாட்சி அராசாங்கத்தின் மீது, மக்கள் வெறுப்படைய மைத்திரிதான் காரணம்: இம்ரான் மகரூப் சாடல்

நல்லாட்சி அராசாங்கத்தின் மீது, மக்கள் வெறுப்படைய மைத்திரிதான் காரணம்: இம்ரான் மகரூப் சாடல் 0

🕔5.Jun 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மகிந்தவின் விசுவாசிகள் பலருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி, அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டமைதான், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்படைய பிரதான காரணமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். தேசிய கல்வி ஊழியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட நிர்வாகிகளை இன்று செவ்வாய்கிழமை கிண்ணியாவில் சந்தித்து உரையாற்றும் போதே அவர்

மேலும்...
வியாழேந்திரன் பொய் சொல்லி, சமூகங்களைக் குழப்புகின்றார்: ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

வியாழேந்திரன் பொய் சொல்லி, சமூகங்களைக் குழப்புகின்றார்: ஹிஸ்புல்லாஹ் விளக்கம் 0

🕔5.Jun 2018

செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய புல்லுமலையில் அமைக்கப்படுகின்ற குடிநீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலை விவகாரத்துடன் தனக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அத்துடன், குறித்த தொழிற்சாலை சட்டத்துக்கு முரணாக அமைக்கப்படுவதாக கூறுபவர்கள், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் தமது சந்தேகங்களை நிவர்த்தி

மேலும்...
ஹக்கீமின் அமைச்சினைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம்: கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு

ஹக்கீமின் அமைச்சினைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம்: கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு 0

🕔5.Jun 2018

– அஸ்ரப் ஏ சமத் –ரஊப் ஹக்கீமின் கீழுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினை சுற்றி வளைத்து, இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.மேல் மாகாணத்தில் சேவையாற்றும்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.அரசாங்கம் அனுமதித்திருந்த சம்பள உயர்வான 25 வீத்தினை, உடன் அமுலாக்கி 2015ஆம் ஆண்டிலிருந்து உடனடியாக

மேலும்...
சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பசு: கொன்று விடுமாறு வலியுறுத்தல்

சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பசு: கொன்று விடுமாறு வலியுறுத்தல் 0

🕔5.Jun 2018

எல்லை நாடான சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பல்கேரியாவைச் சேர்ந்த பசு ஒன்றினை கொன்று விடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கால்நடைகள் வளர்ப்புக்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குள், மற்ற நாடுகளில் இருந்து கால்நடைகளை கொண்டு வரவேண்டும் என்றால் அதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.கால்நடை

மேலும்...
ஐ.தே.கட்சியின் உப தவிசாளராக, மங்கள நியமனம்

ஐ.தே.கட்சியின் உப தவிசாளராக, மங்கள நியமனம் 0

🕔5.Jun 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நிதியமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 26ஆம் திகதியிலிருந்து செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி யாப்பின் பிரிவு 7.1(1) இன் படி, அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் மங்கள கடமையாற்றுவார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து, உப தவிசாளர்

மேலும்...
நிகழ காத்திருக்கும் அதிசயம்

நிகழ காத்திருக்கும் அதிசயம் 0

🕔5.Jun 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – தேசியப்பட்டியல் என்கிற ‘வஸ்து’வுக்கு முஸ்லிம் அரசியலில் கொஞ்சம் காரமும் பாரமும் அதிகமாகும். சிலவேளைகளில், முஸ்லிம்  அரசியலில் கேலிக்குரியதொரு சொல்லாகவும் அது பேசப்பட்டிருக்கிறது. புத்தி ஜீவிகளையும் சமூகத்துக்காகத் தொண்டாற்றுகின்றவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசியப்பட்டியல் முறைமையானது, அநேகமான தருணங்களில் அந்த இலக்கை நிறைவேற்றவில்லை என்பது, வேறு கதையாகும். தொடங்கிய கதை முஸ்லிம்

மேலும்...
பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு, என்னால் பணம் கொடுக்க முடியும்: கபீர் ஹாசிம்

பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு, என்னால் பணம் கொடுக்க முடியும்: கபீர் ஹாசிம் 0

🕔5.Jun 2018

பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு பணம் தேவைப்பட்டால், தன்னால் கொடுக்க முடியும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனைக் கூறினார். மேலும், தேர்தல் பிரசாரத்துக்காக யாரிடமும் தான் பணம் பெற்றுக் கொள்ளவில்லை

மேலும்...
சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை

சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை 0

🕔4.Jun 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியமையினால், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தை அமைப்போம்” என்று தெரிவித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. சு.கட்சியின் புதிய செயலாளராக ரோஹன லக்ஷமன் பியதாஸ, முதன்முதலில் ஊடகங்களுடன் பேசும் போது, இந்த நிலை ஏற்பட்டது. எவ்வாறாயினும் தனது தவறை புரிந்து கொண்ட புதிய செயலாளர்; “ஜனாதிபதி

மேலும்...
யாரையும் பின்கதவால் சந்தித்து, ஆட்சி மாற்றம் பற்றி நாம் கதைப்பதில்லை: அமைச்சர் றிசாட் பதியுதீன்

யாரையும் பின்கதவால் சந்தித்து, ஆட்சி மாற்றம் பற்றி நாம் கதைப்பதில்லை: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔4.Jun 2018

– சுஐப் எம்.காசிம் – முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடனும், எமது கட்சியின் முதன்மைப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், இந்த மூன்று வருட காலப் பகுதியில் நமது சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு எந்தவொரு நன்மையையும் மேற்கொள்ளாத போதும், நாங்கள் அரசாங்கத்துக்குள்ளேயே இருந்து, முடிந்தளவு சமூகத்தின் நன்மைக்காக போராடி வருகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
மஹிந்தவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, மைத்திரி எடுக்க வேண்டும்: வாசு

மஹிந்தவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, மைத்திரி எடுக்க வேண்டும்: வாசு 0

🕔4.Jun 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார். சோஸலிச முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் உள்ளது. அதனை அதிகரிக்கும்

மேலும்...
கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளுக்கு பிணை

கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளுக்கு பிணை 0

🕔4.Jun 2018

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவியும் மகளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பெண்ணொருவரை தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் குறித்த இருவரையும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இன்று  திங்கட்கிழமை மேற்படி இருவரும் நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்...
காலித்தீன் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

காலித்தீன் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம் 0

🕔3.Jun 2018

– யூ.எல்.எம். றியாஸ் –  உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயலாகுமென அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர ஊடகவியலாளர் யூ.கே. காலித்தீன் மீது சாய்ந்தமருதில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே

மேலும்...
சரத்பொன்சேகாவின் அமைச்சு அலுவலகம்; 702 மில்லியன் ரூபாய் வாடகை

சரத்பொன்சேகாவின் அமைச்சு அலுவலகம்; 702 மில்லியன் ரூபாய் வாடகை 0

🕔2.Jun 2018

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கீழுள்ள பிராந்திய அபிவிருத்தி மற்றும் வனவிலங்குத் துறை  அமைச்சுக்கான அலுவலகத்துக்காக, தனியார் கட்டடமொன்றினை 702 மில்லியன் ரூபாவுக்குக் குத்தகை அடிப்படையில் பெற்றுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாதமொன்றுக்கு 11.7 மில்லியன் (01 கோடியே 17 லட்சம்) ரூபாய் எனும் அடிப்படையில் 05 வருடங்களுக்கு மேற்படி கட்டடம் குத்தகைக்குப் பெறப்பட்டுள்ளது. தனியார்

மேலும்...
முஸ்லிம்களின் எதிரியாக என்னை கூறினீர்களே, இப்போது என்ன நடக்கிறது: ஹக்கீடம் கேட்ட மஹிந்த

முஸ்லிம்களின் எதிரியாக என்னை கூறினீர்களே, இப்போது என்ன நடக்கிறது: ஹக்கீடம் கேட்ட மஹிந்த 0

🕔1.Jun 2018

– ஏ.எச்.எம். பூமுதீன் – மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் (இப்தார்) நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அவருடைய கொழும்பு வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. 500 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்த போதிலும் சுமார் 750 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்,எம்.பௌஸி, ஹிஸ்புள்ளாஹ் , முன்னாள் அமைச்சர் அதாவுள்ளா உட்பட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்