Back to homepage

பிரதான செய்திகள்

பேய்களுக்கான கொட்டு முழக்கம்

பேய்களுக்கான கொட்டு முழக்கம்

பேரினவாதத்தின் வாய்களுக்கு இந்த நாட்களில் கொஞ்சம் அதிகமாகவே ‘அவல்’ கிடைத்திருக்கிறது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் பற்றிய பேச்சுத்தான் அந்த அவலாகும். ஒருபுறம், இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நாட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கும் புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் தேவை அவசியமாகிறது என்று ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், புதிய அரசியல் அமைப்பு

மேலும்...
மாடறுப்பைத் தடுக்க  திட்டம்: மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யச் சொல்கிறார் ஜனாதிபதி

மாடறுப்பைத் தடுக்க திட்டம்: மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யச் சொல்கிறார் ஜனாதிபதி

மாடுகளைக் கொல்வதனை நாட்டில் தடுக்கும் பொருட்டு, மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தான் கூறியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். களுத்துறை, பயாகலை இந்துக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; “நாட்டு மக்களிடம் சமாதானத்தையும்

மேலும்...
பாலியல் தொந்தரவு: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிடலாம்

பாலியல் தொந்தரவு: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிடலாம்

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது பாலியல் அல்லது வேறுவகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தால், அது குறித்து தம்மிடம் முறையிடுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், குறித்த நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கும் சபாநாயகர் ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்றும் சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆயினும்,

மேலும்...
பிரதமர் ரணில் சுவிஸர்லாந்து பறந்தார்

பிரதமர் ரணில் சுவிஸர்லாந்து பறந்தார்

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் சுவிஸர்லாந்து பயணமானார். அவருடன் 12 உறுப்பினர் கொண்ட குழுவொன்றும் பயணமானது. அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் பிரதமருடன் பயணிக்கும் குழுவில் அடங்குகின்றனர். நாளை புதன்கிழமை புதல் முதல் 23 ஆம் திகதி வரை

மேலும்...
அடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம்

அடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம்

உலக சனத்தொகையில் ஒரு சதவீதமான செல்வந்தர்கள், ஏனைய மக்களிடமுள்ள ஒட்டுமொத்த செல்வத்தையும் விடவும் அதிக செல்வத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று ஒக்ஸ் ஃபாம் உதவி மற்றும் அபிவிருத்திக்கான தொண்டுநிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சனத் தொகையில் ஒரு வீதம் என்பது கிட்டத்தட்ட 07 கோடியே 30 லட்சம் பேர்களாவர். உலக ஏற்றத்தாழ்வு பற்றிய புதிய அறிக்கையொன்றிலேயே ஒக்ஸ் ஃபாம் நிறுவனம்

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாரஹன்பிட்டியவிலுள்ள அபயராமய விஹாரைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்படி விடயத்தை அவர் கூறினார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;“பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகள் நடைமுறைப்படுத்தினால் தேசிய பொலிஸ் படையை முடிவுக்கு

மேலும்...
இலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது

இலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது

இலங்கையைச் சேர்ந்த சாரதி ஒருவரை, சவுதி அரேபியாவின் அரச குடும்பமொன்று கௌரவித்துள்ளது. நீண்டகாலமாக தமது சாரதியாகப் பணியாற்றிய ஒருவரை பிரியாவிடை நிகழ்வொன்றை நடத்தி, இவ்வாறு கௌரவித்துள்ளது. குறித்த இலங்கையர் , சுமார் 33 வருடங்கள் அக்குடும்பத்தில் சாரதியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் 76 வயதான மேற்படி சாரதி  ஓய்வு பெறுவதை அடுத்து, குறித்த அரச குடும்பம் அவரை கௌரவப்படுத்த தீர்மானித்து

மேலும்...
கிழக்கு மாகாணத்தில் சர்வதேச முதலீட்டாளர் அமர்வு; எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில்

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச முதலீட்டாளர் அமர்வு; எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில்

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர் அமர்வில், தமிழகத்தின் 125 தொழில்துறையாளர்களுடன், உலகெங்கிலும் உள்ள 400 தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். இந்த அமர்வு, எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து 125 பேரும், பெங்களூரில் இருந்து 20 பேரும், டெல்ஹி மற்றும்

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம்

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை 06 அல்லது 07 ஆகக் குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.தற்போது, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் 09 கட்டாயப் பாடங்களையும், 01 விருப்பத் தேர்வுப் பாடமுமாக மொத்தம் 10 பாடங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இந்த நிலையில். புதிய பாடநெறிகளை தயார் செய்துள்ளதாக தேசிய

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த

உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த

உள்ளுராட்சி சபைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால், கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை முன்பு இருந்தவர்களிடம் வழங்கி, மீளவும் இயங்கச் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடமேல் மாகாண உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நேற்று சனிக்கிழமை வடமேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ. பீ. ஹேரத்தின் வாரியபொல இல்லத்தில் இடம்பெற்றது. இதனையடுத்து  ஊடகங்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்