Back to homepage

பிரதான செய்திகள்

உண்ணா விரதத்தை முடித்த ரத்ன தேரர், வைத்தியசாலைக்கு விரைவு

உண்ணா விரதத்தை முடித்த ரத்ன தேரர், வைத்தியசாலைக்கு விரைவு 0

🕔3.Jun 2019

கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தனது உண்ணா விரதத்தை நிறைவு செய்துள்ளார். இதனயைடுத்து, அவர் கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இன்றைய தினம் வரை, நான்கு நாட்கள் அவர் உண்ணா விரதமிருந்தார். ஆயினும் அவர்

மேலும்...
பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து 2289 பேர் கைது;  1665 நபர்களுக்கு பிணை

பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து 2289 பேர் கைது; 1665 நபர்களுக்கு பிணை 0

🕔3.Jun 2019

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 2289 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களில் 1665 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் 423 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 211 பேர் தடுப்புக் காவலில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ஹிஸ்புல்லாவின் ராஜிநாமா கடிதம்; முழுமையான தமிழாக்கம்

ஹிஸ்புல்லாவின் ராஜிநாமா கடிதம்; முழுமையான தமிழாக்கம் 0

🕔3.Jun 2019

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது பதவியை ராஜிநாமாச் செய்து, அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளார். அந்த வகையில், ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் தமிழாக்கத்தை இங்கு வழங்குகின்றோம். ‘2019, ஏப்ரல் 21 ஆம் திகதிய தீவிரவாதத் தாக்குதலை முஸ்லிம் உலமாக்கள், முஸ்லிம் சமூகத்தவர்கள் கண்டித்ததன் பின்னரும் , முஸ்லிம் சமூகத்தவரை உளவியல் யுத்தம்

மேலும்...
முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் ராஜிநாமா செய்தேன்: ஹிஸ்புல்லா

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் ராஜிநாமா செய்தேன்: ஹிஸ்புல்லா 0

🕔3.Jun 2019

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை தான் ராஜிநாமா செய்துள்ளதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். “இன ரீதியாக முஸ்லிம்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, முஸ்லிம்களின் சொத்துக்கள் வன்முறையின் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு

மேலும்...
அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதமிருக்கும் இடத்துக்குச் சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல்

அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதமிருக்கும் இடத்துக்குச் சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல் 0

🕔3.Jun 2019

அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதம் இருக்கும் இடத்துக்குச் சென்றிருந்ததாகக் கூறப்படும் முஸ்லிம்கள் மூவர் இன்று திங்கட்கிழமை காலை தாக்கப்பட்டுள்ளனர். குறித்த இடத்தில் இருந்தவர்களே அந்த மூவரையும் தாக்கியதாக ஆங்கில ஊடகமொன்று வீடியோவுடன் செய்தி வெளியிட்டள்ளது. அங்கிருந்த ராணுவத்தினர் குறித்த முஸ்லிம்கள் மூவரையும் பாதுகாக்க முயற்சித்த நிலையிலேயே அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் றிசாட் பதியுதீன், ஆளுநர்கள்

மேலும்...
கிழக்கு, மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா

கிழக்கு, மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா 0

🕔3.Jun 2019

கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். கிழக்கி மாகாண ஆளுநர் எம்.எல்.எஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் தமது ராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில், அவர்களின் ராஜிநாமாகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது. ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி மற்றும் அமைச்சர்

மேலும்...
பண்டா விடுவித்த நாய்

பண்டா விடுவித்த நாய் 0

🕔2.Jun 2019

– என். சரவணன் – நீதிமன்ற அவதூறு வழக்கில் 19 ஆண்டுகால சிறைத்தண்டனை (6 வருடங்களில் முடியக் கூடிய வகையில்) பெற்று கடந்த வருடம் ஓகஸ்ட் தொடக்கம் சிறையில் இருந்த ஞானசார தேரருக்கு எட்டு மாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். 23ஆம் திகதி மாலை வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் பல மணி

மேலும்...
கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கல்

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கல் 0

🕔2.Jun 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தினால் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியைகளுக்கான அதிகரிக்கப்பட்ட 1000 ரூபா  கொடுப்பனவு மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உவர்மலை  விவேகானந்தா கல்லூரியில் இடம் பெற்றது. முன்பள்ளி ஆசியைகளுக்கான மாதாந்த கொடுப்பனவு 3000 ரூபாவாக

மேலும்...
விரதத்தை முடித்தார் வியாழேந்திரன்

விரதத்தை முடித்தார் வியாழேந்திரன் 0

🕔2.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தனது உண்ணா விரதப் போராட்டத்தை கடந்த இரவு முடித்துக் கொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் உண்ணா விரதப் போராட்டத்தை சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் ஆரம்பித்தார். எவ்வாறாயினும் அவர் தனது உண்ணா விரதத்தை

மேலும்...
உண்ணா விரதம் இருப்பதாகக் கூறப்படும் ரத்ன தேரர், நீர் ஆகாரம் அருந்தினார்: அம்பலமாக்கியது நியுஸ் ஃபெஸ்ட்

உண்ணா விரதம் இருப்பதாகக் கூறப்படும் ரத்ன தேரர், நீர் ஆகாரம் அருந்தினார்: அம்பலமாக்கியது நியுஸ் ஃபெஸ்ட் 0

🕔2.Jun 2019

– அஹமட் – உண்ணா விரதம் இருந்து வருவதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், திரவ ஆகாரம் பருகும் காட்சியொன்றினை, கடந்த இரவு ‘நியுஸ் ஃபெஸ்ட்’ ஒளிபரப்பியது. கண்டி வைத்தியசாலை மருத்துவர்கள் குழாமொன்று சனிக்கிழமை மாலை, தேரர் – உண்ணாவிரதம் இருக்கும் இத்துக்குச் சென்று, அவரின் உடல் நிலையைப் பரிசோதித்ததாகவும் அந்தச் செய்தியில்

மேலும்...
பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி

பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி 0

🕔1.Jun 2019

–  பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம்  பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர்  படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை குறித்த ராணுவ முகாமில் சிரமதான நடவடிக்கையில் ராணுவ அணி ஈடுபட்டிருந்தது. இதன்போது கல் ஒன்றை நான்கு ராணுவ வீரர்கள் இணைந்து

மேலும்...
முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக, தேரர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக, தேரர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் 0

🕔1.Jun 2019

– அஷ்ரப் ஏ சமத் – அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. சிங்களய பலமண்டலய, ஜக்கிய ராச்சியம்  மற்றும் நாட்டை பாதுகாப்போம் எனும் இயக்கங்கள் இணைந்து விக்டோரியா பார்க் முன்றலில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன. இதன்போது

மேலும்...
ராணுவ சீருடையை ஒத்த, சிறுவர்களுக்கான உடுப்புக்களை விற்றவர்களுக்கு, சிறைத்தண்டனை

ராணுவ சீருடையை ஒத்த, சிறுவர்களுக்கான உடுப்புக்களை விற்றவர்களுக்கு, சிறைத்தண்டனை 0

🕔1.Jun 2019

– பாறுக் ஷிஹான் – ராணுவ சீருடைக்கு சமனான ‘கெமா’ என்றழைக்கப்படும் உடுதுணிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தார்கள் எனும் குற்றத்துக்காக 08 முஸ்ஸீம்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாதம் சிறைத்தண்டனை வழங்கி பருத்திதுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார். பருத்திதுறை பொலிஸார் கடந்த 14ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதலின் போது,

மேலும்...
ரத்ன தேரரின் கோரிக்கையை முன்னிறுத்தி, நாடளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உண்ணா விரதம்

ரத்ன தேரரின் கோரிக்கையை முன்னிறுத்தி, நாடளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உண்ணா விரதம் 0

🕔1.Jun 2019

– மப்றூக் – நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரின் கோரிக்கையை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனும் இன்று சனிக்கிழமை அடையாள உண்ணா விரதப் போராட்டமொன்றினை ஆரம்பித்துள்ளார். மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமர்ந்தவாறு, இவர் தனது உண்ணா விரத போராட்டத்தை

மேலும்...
ஈராக், சிரியாவில் 1300 பேரை தவறுதலாகக் கொன்று விட்டோம்: அமெரிக்க கூட்டுப் படை தெரிவிப்பு

ஈராக், சிரியாவில் 1300 பேரை தவறுதலாகக் கொன்று விட்டோம்: அமெரிக்க கூட்டுப் படை தெரிவிப்பு 0

🕔1.Jun 2019

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களில், 2014ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை எதிர்பாராத விதமாக 1,300 குடிமக்களை கொன்றுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படை தெரிவித்துள்ளது. எனினும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மனித உரிமைகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 8,000 முதல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்