Back to homepage

பிரதான செய்திகள்

அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு

அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔8.Jun 2019

சிறுபான்மை மக்களுக்காக இப்போது முதலை கண்ணீர் வடிக்கும் மங்கள சமரவீர, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்முறைகளினால் சேதமாக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாயலுக்கு 27 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிராகரித்ததுடன், 01 மில்லியன் மாத்திரமே வழங்க முடியும் என கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும்

மேலும்...
பெருந் தொகைப் பணத்துடன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் கைது

பெருந் தொகைப் பணத்துடன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் கைது 0

🕔8.Jun 2019

– கலீபா – பொத்துவில் பிரதேச சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவரை பெருந்தொகைப் பணத்துடன் கடந்த இரவு ராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர். மேற்படி உறுப்பினர் குறித்த பணத்துடன் பயணித்திருந்த வேளையில், பொத்துவில் பிரதேச எல்லைக்குள் அமைக்கப்பட்டிருந்த ராணுவத்தின் சோதனைச் சாவடியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின்போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் தேவையொன்றுக்காக தனது சொத்து ஒன்றை விற்பனைசெய்து

மேலும்...
நாட்டை விட்டு வெளியேற, 07 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: ஹிஸ்புல்லா தெரிவிப்பு

நாட்டை விட்டு வெளியேற, 07 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔7.Jun 2019

நாட்டை விட்டும் வெளியேறுவதற்காக சுமார் 07 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றுக்கு விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டும் வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும்

மேலும்...
விமல், எஸ்.பிக்கு எதிராக, றிசாட் முறைப்பாடு

விமல், எஸ்.பிக்கு எதிராக, றிசாட் முறைப்பாடு 0

🕔7.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச மற்றும் எஸ் பி திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் முறைப்பாடு ஒன்றை பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பதிவு  செய்துள்ளார் பயங்கரவாத இயக்கத்துடனும் சஹ்ரானுடனும் தன்னை தொடர்புபடுத்தி மீண்டும் மீண்டும் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வரும்  இவ்விரு அரசியல்வாதிகளும்

மேலும்...
சஹ்ரான் குழுவினரின் சடலங்கள், தோண்டி எடுக்கப்பட்டன

சஹ்ரான் குழுவினரின் சடலங்கள், தோண்டி எடுக்கப்பட்டன 0

🕔7.Jun 2019

– பாறுக் ஷிஹான் – சாய்ந்தமருதில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான சில பயங்கரவாதிகளினதும், அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் இன்று வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டன. அம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் மேற்படி சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட உடல்களின் பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக ரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி

மேலும்...
காத்தான்குடி வரவேற்பு வளைவிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்ற, மட்டக்களப்பு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

காத்தான்குடி வரவேற்பு வளைவிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்ற, மட்டக்களப்பு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம் 0

🕔6.Jun 2019

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்டபிரதேசங்களிலுள்ள பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்துதல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் போன்றவற்றுக்கான பிரேரணைகள் மட்டக்களப்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போதே, இந்த பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டது. மேயர் ரி. சரவணபவன் தலைமையில் இந்த அமர்வு இடம்பெற்றது.

மேலும்...
ராஜிநாமா கடிதம் திங்கட்கிழமையே கொடுத்தாயிற்று: உறுதிப்படுத்தினார் ஹரீஸ்

ராஜிநாமா கடிதம் திங்கட்கிழமையே கொடுத்தாயிற்று: உறுதிப்படுத்தினார் ஹரீஸ் 0

🕔6.Jun 2019

– அஹமட் – தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள், அதற்குரிய கடிதங்களை பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதிக்கு முகவரியிட்டு முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் எழுதிய கடிதங்களை, பிரதமரிடம் திங்கட்கிழமையன்றே ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில், ஜனாதிபதிக்கு முகவரியிட்டு – தான் எழுதிய கடிதத்தின் பிரதியினை, முன்னாள் ராஜாங்க அமைச்சர்

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்களின்   ராஜிநாமாவினால், பௌத்த பீடங்கள் அகப்பட்டுட்டுக் கொண்டுள்ளன: பஷீர் சேகுதாவூத்

முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமாவினால், பௌத்த பீடங்கள் அகப்பட்டுட்டுக் கொண்டுள்ளன: பஷீர் சேகுதாவூத் 0

🕔6.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும், தமது அமைச்சுப் பதவிகளை ஒன்றாகத் துறந்தமையின் மிக முக்கியமான தாக்கம், பௌத்த பீடங்களின் அதிகாரத்தின் மீது விழுந்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அமைச்சர்கள் பதவியைத் துறந்த போதும், அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்கிற அறிவிப்பினால், பௌத்த பீடங்கள் ‘அகப்பட்டு’க்

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை விடுதியில் நடப்பது என்ன? மேலதிகாரிகள் கவனியுங்கள்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை விடுதியில் நடப்பது என்ன? மேலதிகாரிகள் கவனியுங்கள் 0

🕔6.Jun 2019

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதியில் விரும்பத்தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த விடுதியை அந்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி பயன்படுத்துவதாகவும், ஆனால் முறையான அனுமதியைப் பெறாமலும், விடுதியைப் பயன்படுத்துவதற்கான கொடுப்பனவைச் செலுத்தாமலும் சட்ட விரோதமான முறையிலேயே, குறித்த வைத்தியப் பொறுப்பதிகாரி அங்கு தங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அந்தப்

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமா; ஜனாதிபதிக்கு கடிதம் கிடைக்கவில்லையாம்

முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமா; ஜனாதிபதிக்கு கடிதம் கிடைக்கவில்லையாம் 0

🕔6.Jun 2019

தமது பதவிகளை முஸ்லிம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும், அதற்கான கடிதங்களை அவர்கள் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை என, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் என 09 முஸ்லிம்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்வதாக திங்கட்கிழமை அறிவித்திருந்தனர். ராஜிநாமா செய்ததாக அறிவித்துள்ள அமைச்சர்கள் தமது வாகனங்களை இன்னும் ஒப்படைக்கவில்லை

மேலும்...
ராஜிநாமா செய்த அமைச்சர்கள், மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்: மகா நாயக்கர்கள் வேண்டுகோள்

ராஜிநாமா செய்த அமைச்சர்கள், மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்: மகா நாயக்கர்கள் வேண்டுகோள் 0

🕔5.Jun 2019

தமது அமைச்சுப் பதவிகளை ராஜிநாமாச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் அந்தப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என்று, மூன்று பௌத்த பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்தை அடுத்து, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்று பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் சந்தித்து இன்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். கண்டி அஸ்கிரிய மகா விகாரையில்

மேலும்...
கிழக்குக்கு மீண்டும் சிங்கள ஆளுநர்: ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்

கிழக்குக்கு மீண்டும் சிங்கள ஆளுநர்: ஷான் விஜயலால் டி சில்வா நியமனம் 0

🕔5.Jun 2019

கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இவர் இன்று புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்துக்கு, முதன் முதலாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நியமனத்துக்கு

மேலும்...
காட்டுச் சட்டம் போடும், இனவாதிகளைப் பாதுகாக்கின்றீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் சாட்டையடி

காட்டுச் சட்டம் போடும், இனவாதிகளைப் பாதுகாக்கின்றீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் சாட்டையடி 0

🕔5.Jun 2019

பயங்கரவாதத்துடன் துளியளவேனும் தொடர்பில்லாத தன்னை, வேண்டுமேன்றே திட்டமிட்டு தொடர்புபடுத்தி ஊடகங்களில் கொக்கரித்து கொண்டு திரியாமல் முறைப்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமா றிசாட் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.  அவ்வாறான எந்த விசாரணைகளுக்கு முகம்கொடுக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் தயார் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

மேலும்...
றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பதிய பொலிஸ் குழு நியமனம்

றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பதிய பொலிஸ் குழு நியமனம் 0

🕔4.Jun 2019

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பான புகார்களை ஏற்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்களை பற்றிய புகார்களை முன்வைப்பதற்கு மூன்று சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழுவொன்று பொலிஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். காலை 8 முதல் மாலை 4

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு

றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு 0

🕔4.Jun 2019

“அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது எம்மிடம் புகார் செய்பவர்கள் எவரும் அவருக்கு எதிரான சாட்சியங்கள் எதையும் முன் வைக்கவில்லை. அவர்கள் எம்மிடம் வெறும் புகார் கடிதங்களையே தந்துள்ளனர். அவற்றை வைத்துக்கொண்டு எவரையும் எம்மால் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ, வாக்குமூலம் பெறவோ முடியாது”. இவ்வாறு, பொலிஸ் புலனாய்வு துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்