Back to homepage

பிரதான செய்திகள்

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு 0

🕔14.Apr 2024

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலொன்றை நேரடியாக நடத்தியுள்ளது. ஆளில்லா விமானங்கள் (ட்ரோான்) மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இம்மாதம் 01ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் கூறுகிறது. இந்த நிலையில் 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள்

மேலும்...
200 கிலோகிராம் போதைப் பொருளுடன் ஆழ்கடலில் 10 இலங்கையர் கைது

200 கிலோகிராம் போதைப் பொருளுடன் ஆழ்கடலில் 10 இலங்கையர் கைது 0

🕔12.Apr 2024

இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் சுமார் 200 கிலோகிராம் போதைப் பொருளை கடற்படையினரால் கைப்பற்றியுள்ளனர். ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையுடன், பல நாள் மீன்பிடி படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இரண்டு படகுகளிலும் இருந்து 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும்...
வறுமை ஒழிப்பு திட்டத்தை முன்வைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளேன்: உதுமான்கண்டு நாபீர்

வறுமை ஒழிப்பு திட்டத்தை முன்வைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளேன்: உதுமான்கண்டு நாபீர் 0

🕔11.Apr 2024

– மப்றூக், படங்கள் எம்.எப். றிபாஸ் – சமூகத்திலுள்ள வறுமை நிலையை குறைப்பதற்கான திட்டத்தை முன்வைத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – தான் களமிறங்கப் போவதாக, நாபீர் பௌண்டேசன் அமைப்பின் தலைவர் பொறியிலாளர் உதுமான்கண்டு நாபிர் தெரிவித்தார். ‘சிலோன் ஜேர்னலிஸ்ட்ஸ் போரம்’ அட்டாளைச்சேனையில் ஊடகவியலாளர்களுக்கென அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ‘இஃப்தார்’ நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து

மேலும்...
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு 0

🕔11.Apr 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தீர்மானித்து அது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் பொறுப்பை, அந்தக் கட்சியின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதென அந்தக் கட்சியின் அரசியல் பீடம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடத்தின் கூட்டம் – கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
புதிய சின்னத்தில் ரணில் போட்டியிடுவார்: ஐ.தே.கட்சி சிரேஷ்ட தலைவர் தெரிவிப்பு

புதிய சின்னத்தில் ரணில் போட்டியிடுவார்: ஐ.தே.கட்சி சிரேஷ்ட தலைவர் தெரிவிப்பு 0

🕔10.Apr 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யானை அல்லது மொட்டு தவிர்ந்த புதிய சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “ஜனாதிபதி ரணில்

மேலும்...
2500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி

2500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி 0

🕔9.Apr 2024

‘அனைவருக்கும் ஆங்கிலம்’ திட்டத்தின் கீழ் 2,500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார். க.பொ.த சாதாரண தர பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கு மொத்தம் 4,441 ஆங்கில ஆசிரியர்களுக்கு

மேலும்...
அட்டாளைச்சேனையில் ‘யுக்தி’ சஞ்சிகை கையளிப்பு

அட்டாளைச்சேனையில் ‘யுக்தி’ சஞ்சிகை கையளிப்பு 0

🕔9.Apr 2024

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தொடராக வெளியிட்டு வரும் ‘யுக்தி’ எனும் இலக்கியச் சஞ்சிகையின் 08ஆவது இதழை எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பி.ரி.எம். இர்பான் மற்றும் கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ். ஜவ்பர் ஆகியோர் வழங்கி வைத்தனர். யுக்தி சஞ்சிகையின் 08ஆவது இதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற விரிவுரையாளர் எம்.ஐ.

மேலும்...
தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவர், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார்

தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவர், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔8.Apr 2024

– முன்ஸிப் – தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அரச வங்கி கிளையொன்றில் – ஏமாற்றி அடகு வைத்து பணம் பெற்றார் எனும் குற்றச்சாட்டில், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹஸீப் தலைமையிலான குழுவினர் இன்று (08) கைது செய்தனர். அக்கரைப்பற்று – சாகாமம்

மேலும்...
வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்: அமைச்சர் பிரசன்ன

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்: அமைச்சர் பிரசன்ன 0

🕔8.Apr 2024

புலிகள் அமைப்பின் பயங்கரவாதப் போரின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு 10 குடும்பங்கள் தங்கியுள்ளன. இதில் 09 குடும்பங்களுக்கு

மேலும்...
முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி

முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி 0

🕔8.Apr 2024

முஸ்லிம்களுக்கு தமது மதநம்பிக்கையின் பிரகாரம் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்படும் என – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு எந்த மதமாக, எந்த இனமாக இருந்தாலும் எந்த ஒரு நபரின் இறுதிச் சடங்கையும் அவரின் இறுதி விருப்பத்துக்கு அமைய மேற்கொள்ள இடமளிப்பது தொடர்பிலும் இந்தக் குழு ஆராயும் என்று தெரிவித்த

மேலும்...
நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔8.Apr 2024

நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக அவர் கூறியுள்ளார். “வழக்கமாக நாளாந்தம் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில்

மேலும்...
பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்க, இலங்கையில் முதற்தடவையாக சந்தர்ப்பம்

பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்க, இலங்கையில் முதற்தடவையாக சந்தர்ப்பம் 0

🕔7.Apr 2024

முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தையர்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் வீதியிலுள்ள மகளிர் வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்துக்காக தனித்தனி அறைகள் காணப்படுகின்றமையினால், குழந்தையின் தந்தையும் பிரசவ அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள்

மேலும்...
காரில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

காரில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி 0

🕔7.Apr 2024

காரில் வந்த குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். மொரகஹேன, தல்கஹவில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். வெள்ளை நிற காரில் வந்த குழுவொன்றே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 52

மேலும்...
இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு

இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு 0

🕔7.Apr 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 20 கிலோகிராம்அரிசி வழங்குவதற்கு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி,

மேலும்...
அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 10 ஆயிரம் ரூபாய் இம்மாதம் வழங்கப்படும்

அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 10 ஆயிரம் ரூபாய் இம்மாதம் வழங்கப்படும் 0

🕔7.Apr 2024

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவில் 2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவும் உள்ளடங்கியிருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு அரச ஊழியருக்கும் மேலதிகமாக 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். அத்துடன், ஏப்ரல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்