Back to homepage

பிரதான செய்திகள்

இலத்திரனியல் வர்த்தகம் மேற்கொள்ள இலங்கையர்கள் அச்சம்; சட்திலுள்ள குறைபாடுகள் காரணமாகும்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

இலத்திரனியல் வர்த்தகம் மேற்கொள்ள இலங்கையர்கள் அச்சம்; சட்திலுள்ள குறைபாடுகள் காரணமாகும்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

  ஒன்லைன் முறைமையை பயன்படுத்தும் இலத்திரனியல் வர்த்தக நடவடிக்கையில், இலங்கை நுகர்வோர்கள் இன்னும் அச்சத்துடனேயே இருப்பதாகவும், சட்டங்களிலும் ஒழுங்கு விதிகளிலும் உள்ள குறைபாடுகளும் போதிய பாதுகாப்பு இன்மையுமே இதற்குக் காரணமாக அமைவதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலக நுகர்வோர் தினத்தையொட்டி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில், ‘டிஜிட்டல் முறையிலான சாதாரண சந்தைப்படுத்தல்

மேலும்...
ஜமிஆ நளீமிய்யாவில் அரபு மொழி கற்கை நெறி; ஆர்வமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

ஜமிஆ நளீமிய்யாவில் அரபு மொழி கற்கை நெறி; ஆர்வமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரபு மொழி கற்கை நிலையம்; அரபு மொழியை அடிப்படையிலிருந்து கற்க விரும்புவோருக்கான மூன்று மாத கால ஆரம்ப கற்கை நெறி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. நவீன கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்தி அரபு மொழியில் செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு ஆற்றல்களையும் விருத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாடநெறி பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

மேலும்...
ஞானசாரவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

ஞானசாரவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையொன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால், அவருக்கு எதிராக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. திட்டமிட்ட குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவினர், மேற்படி வழக்கினை ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்திருந்தனர். இதேவேளை, ஜப்பானில் ஜனாதிபதி கலந்து

மேலும்...
பேஸ்புக் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு, ஜனாதிபதி அறிவுறுத்தல்

பேஸ்புக் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு, ஜனாதிபதி அறிவுறுத்தல்

பேஸ்புக் மீதான தடையினை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு, அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறைகளை ஊக்குவிக்கும் படியான பதிவுகளை பேஸ்புக்கில் இடுவதைக் கட்டுப்படுத்துவதாக, அந்த நிறுவன அதிகாரிகள் வழங்கிய உறுதியினை அடுத்து, பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். பேஸ்புக்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா; 01ஆம் திகதி, கொழும்பில் நடைபெறுகிறது

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா; 01ஆம் திகதி, கொழும்பில் நடைபெறுகிறது

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பன்னிரெண்டாவது  பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும்  ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விழா தொடர்பான  அனைத்து ஏற்பாடுகளையும் பலகலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. வெளிவாரி படிப்பை நிறைவு செய்த 510  மாணவர்கள், முகாமைத்துவ முதுமாணி  பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 19 பேர் உட்பட, மொத்தம் 950

மேலும்...
அர்ஜுனை கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துமாறு உத்தரவு

அர்ஜுனை கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துமாறு உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதேவேளை, பெபேசுவல்ஸ் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர் ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை, தொடர்ந்தும் 27ஆம் திகதி வரை, விளக்க மறியலில்

மேலும்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஹிஸ்புல்லாவின் முயற்சியால் புதிய வீடுகள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஹிஸ்புல்லாவின் முயற்சியால் புதிய வீடுகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன – புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய, புதிய வீட்டுத்திட்ட கிராமத்தை அமைப்பதற்கான வேலைகள் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் எல்லைக்கிராமமான ரிதிதென்ன

மேலும்...
ஜனாதிபதியின் ஜப்பான் குழுவில் ஞானசார தேரர் இல்லை: ஊகங்களை மறுத்தார் ஒஸ்ரின் பெனாண்டோ

ஜனாதிபதியின் ஜப்பான் குழுவில் ஞானசார தேரர் இல்லை: ஊகங்களை மறுத்தார் ஒஸ்ரின் பெனாண்டோ

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய குழுவில், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரர் உள்ளடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள ஊகத்தினை, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ மறுத்துள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தூதுக்குழுவில் பௌத்த பிக்கு என்ற வகையில், உலபன சுமங்கல தேரர் மட்டுமே அடங்கியுள்ளார் என்றும், அவர் கூறினார். ஆங்கில ஊடகமொன்று, ஜனாதிபதியின்

மேலும்...
ஆடை உற்பத்தித் துறைக்கு, டிஜிட்டல் உதவி தேவைப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

ஆடை உற்பத்தித் துறைக்கு, டிஜிட்டல் உதவி தேவைப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

“உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சத் தரத்தில் உள்ளன. இத்துறையானது கடந்த ஆண்டில் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாயை பெற்றுத் தந்துள்ளது. தற்போது இத்துறைக்கு டிஜிட்டல் மயமாக்கல் உதவி தேவைப்படுகின்றது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டு சிரேஷ்ட கொள்கை வகுப்பாளர்களுக்கு

மேலும்...
நீங்கியது தடை; மீண்டது வட்ஸ்ஸப்

நீங்கியது தடை; மீண்டது வட்ஸ்ஸப்

வட்ஸ்ஸப் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் இந்தத் தடை நீக்கப்படுமென அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்கள் மீது அரசாங்கம் தடை விதித்திருந்த நிலையில், செவ்வாய்கிமை நள்ளிரவு வைபர் மீதான தடை நீக்கப்பட்டது. தற்போது, வட்ஸ்ஸப் மீதான தடை நீங்கியுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தொடக்கம், பேஸ்புக் மீதான தடை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்