Back to homepage

சர்வதேசம்

மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

மியன்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் நீதிமன்ற வழக்கொன்றை சந்தித்து தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்று எடுத்து செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். அந்த ஆவணத்தை அவர்களிடம் கொடுத்தது காவல்துறை அதிகாரிகள்.

மேலும்...
பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம்

பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம்

உலகின் மிகப் பெரும் பணக்காரர் யார் என்று கேட்டால் பலரும் குறிப்பிடக்கூடிய பெயர்களில் ஒன்று பில்கேட்ஸ். சின்னதாக நாம் ஒரு வீடு கட்டினாலே அதில் முடிந்தவரை அதிக வசதிகள் இருக்கின்றனவா என்று திட்டமிடுவோம். அப்படியிருக்க பில் கேட்ஸின் வீடு எப்படியிருக்கும்? பில் கேட்ஸின் வீட்டுக்கு ஸாநாடு (Xanadu) என்று பெயர் வைத்திருக்கிறார். உடோபியா என்றால் அது

மேலும்...
40 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டெடுப்பு

40 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டெடுப்பு

சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சைபீரியாவில், 100 அடி ஆழத்தில் குதிரையொன்று இறந்து கிடந்ததை அந்தப் பகுதி மக்கள் பார்த்துள்ளனர். ஆனாலும், அது வழக்கத்துக்கு மாறாக வேறு தோற்றத்தில் இருந்ததைக் கண்டமையினால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, சில ஆராய்ச்சியாளர்களுடன் அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார்,

மேலும்...
ஒரு கிலோ தக்காளி 50 லட்சம்: வெனிசுவேலாவில் எகிறும் விலைவாசி

ஒரு கிலோ தக்காளி 50 லட்சம்: வெனிசுவேலாவில் எகிறும் விலைவாசி

வெனிசுவேலா நாட்டின் பணமதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அந்நாட்டுக்கான புதிய பணத்தை, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு வெனிசுவேலாவின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதத்தை தொடும் என்று சர்வதேச செலாவனி நிதியம் கணித்துள்ளது. வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக, அந்நாட்டின் பணமான பொலிவரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி

மேலும்...
உலகை நடுங்கச் செய்த செங்கிஸ்கானுக்கு, 200 மகன்கள் என்பது உண்மையா?

உலகை நடுங்கச் செய்த செங்கிஸ்கானுக்கு, 200 மகன்கள் என்பது உண்மையா?

வடகிழக்கு ஆசியாவில் இருந்து 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஒருவர் உலகத்தையே நடுங்கச் செய்தார். செங்கிஸ்கான் உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். படையெடுத்து செல்லும் அவர், பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும் தனது முன்னால் மண்டியிடச் செய்தார். பல நாடுகளில் ரத்த ஆற்றை ஓடவிட்டு, எதிரிகளின்

மேலும்...
துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக, இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து துருக்கி ஊடகங்கள் தெரிவிக்கையில்; “துருக்கி தலைநகர் அங்காரவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது, வாகனத்தில் வந்த அடையாளம தெரியாத  நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க தூதரக அலுவலகத்தின்

மேலும்...
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களில் இருவர், நெருசலில் சிக்கி பலி

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களில் இருவர், நெருசலில் சிக்கி பலி

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த தொண்டர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, இருவர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில்,தொண்டர்கள் கலைந்துசெல்லும்படி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையிலுள்ள ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின்; கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபம்

மேலும்...
காலமானார் கருணாநிதி

காலமானார் கருணாநிதி

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். 1924 ஜூன் 03ஆம் திகதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் அவர் பிறந்தார். இறக்கும் போது அவருக்கு 94 வயது. சமீப நாட்களாக கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதிக்கு,

மேலும்...
ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள்  அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப்  திங்கட்கிழமை கையெழுத்திட்டார். மேலும், ஈரானுடன்  வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்றும்  ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்...
1945 ஓகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு

1945 ஓகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது 1945 ஓகஸ்ட் மாதம், இதே நாளில்தான் உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு. ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட 6ஆம் தேதி, உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. குண்டு வீசப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்