Back to homepage

கட்டுரை

விஜகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு; அரசியலமைப்பை மீறியதா?

விஜகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு; அரசியலமைப்பை மீறியதா? 0

🕔6.Jul 2018

– வை எல் எஸ் ஹமீட் – சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா? என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா? என்பது இன்னுமொரு விடயம்.இன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம். குறித்த பேச்சுத் தொடர்பாக

மேலும்...
வெறுப்பு

வெறுப்பு 0

🕔4.Jul 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நல்லாட்சி அலுத்துப் போய், வெகு காலமாகிவிட்டது. இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது. “நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில், மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார். மேலும், எஞ்சியிருக்கும்

மேலும்...
போருக்கு பின்னரான வெறுமையில், திசை திரும்பும் தமிழர் அரசியல்

போருக்கு பின்னரான வெறுமையில், திசை திரும்பும் தமிழர் அரசியல் 0

🕔3.Jul 2018

– சுஐப் எம். காசிம் – சிறுபான்மை சமூகத்தினரின் புரிந்துணர்வுடன் நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில், சில விடயங்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒன்றிணைவைத் தூரப்படுத்துகின்றமை கவலையளிக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதை எடுத்தாலும் தற்போது இவ்விரு சமூகங்களும் ஏட்டிக்குப் போட்டியில் ஈடுபடுகின்றன. கிழக்கு மாகாணத்தில் சில தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களை தூரப்படுத்தும் மனநிலையில் நோக்கவும் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பேசியே

மேலும்...
அடி மடியில் கை

அடி மடியில் கை 0

🕔26.Jun 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – மகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்த வேண்டுமென்று, சிறுபான்மைக் கட்சிகள் முனைப்புடன் கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக ‘கண்களைப் பொத்திக் கொண்டு’ கையை உயர்த்தியவர்கள்தான், இப்போது பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கடுமையாக வலியுறுத்துகின்றனர் என்பது கவனத்துக்குரியதாகும். மாகாணசபைத் தேர்தல்கள்

மேலும்...
சொற்களின் அருவருப்பு

சொற்களின் அருவருப்பு 0

🕔19.Jun 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – மலைகளை விடவும் சில சொற்கள் பாரமானவை. உச்சரிக்கப்படும் வரை, சில சொற்களின் பாரம் விளங்குவதேயில்லை. ஒரு போரினைத் தொடங்கி விட – ஒரு சொல் போதுமானதாகும். சொற்களுக்குள் – பொங்கி வழியும் காதல் இருக்கின்றது. முட்டாள்களிடமிருந்து மட்டும் அருவருப்பான சொற்கள் வருவதில்லை. அருவருப்பான சொற்களுக்குள் முட்டாள்தனத்தை விட –

மேலும்...
அட்டாளைச்சேனையின் அடையாளம்: எண்பத்தைந்து வயது ‘இளைஞர்’ இப்றாலைப்பை

அட்டாளைச்சேனையின் அடையாளம்: எண்பத்தைந்து வயது ‘இளைஞர்’ இப்றாலைப்பை 0

🕔17.Jun 2018

– பாவேந்தல் பாலமுனை பாறூக் – காரியலய உடை நேர்த்தி, நேர ஒழுங்கு என்று ஓய்வுக்குப் பின்னும் வாழ்வை ஒழுங்கமைத்துக் கொண்டு வாழ்பவர் ஏ.எல். இப்றாலெவ்வை. எண்பத்தைந்து வயது இளைஞர் இவர். இளமைக்கால சீரான நடை முறை, பயிற்சி, பழக்கம் என்பவை வழங்கிய மன வலிமையினால் தொடர்ந்தும் சமூகப்பணிகளில் துடிப்போடு இயங்கி வருகிறார். ஆத்ம பலத்தோடு

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கதைகளும், கட்டுக் கதைகளும்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கதைகளும், கட்டுக் கதைகளும் 0

🕔16.Jun 2018

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிகமாக புதிய உபவேந்தர் (அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரி) நியமனம் தொடர்பில் மிகப் பிழையான, பாமரத்தனமான கருத்துகளை முகநூல்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் பதிவிடுகின்றமை வேதனையானது. யதார்த்தத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பான தகவல்களை சிலர் வெளியிட்டு வருவது கவலை தருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பில் உளவியல்

மேலும்...
குழந்தைகளைக் குதறும் மிருகங்களும் குட் டச், பேட் டச் முட்டாள்களும்

குழந்தைகளைக் குதறும் மிருகங்களும் குட் டச், பேட் டச் முட்டாள்களும் 0

🕔14.Jun 2018

– திருப்பூர் குணா – “அவ வாயில மூத்திரம் பேயிடா…” குழந்தையின் பாட்டி வாயெல்லாம் பல்லாக சொன்னாள். “பேயிடா… பேயிடா… பேயிடா…” சொல்லிக்கொண்டே வள்ளி முத்தம் கொஞ்சுவதை நிறுத்தவில்லை. வள்ளி எப்போதும் இப்படித்தான். ஆண் குழந்தைகளை குஞ்சாமணியில் முத்தம் கொடுத்து கொஞ்சுவதே அவளது இயல்பு. “இது அவளையறியாமலே அவளுக்குள்ளிருக்கிருக்கும் பாலியல் பிரச்சினை…” என யாராவது வாயைத் திறக்கும்

மேலும்...
நிகழ காத்திருக்கும் அதிசயம்

நிகழ காத்திருக்கும் அதிசயம் 0

🕔5.Jun 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – தேசியப்பட்டியல் என்கிற ‘வஸ்து’வுக்கு முஸ்லிம் அரசியலில் கொஞ்சம் காரமும் பாரமும் அதிகமாகும். சிலவேளைகளில், முஸ்லிம்  அரசியலில் கேலிக்குரியதொரு சொல்லாகவும் அது பேசப்பட்டிருக்கிறது. புத்தி ஜீவிகளையும் சமூகத்துக்காகத் தொண்டாற்றுகின்றவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசியப்பட்டியல் முறைமையானது, அநேகமான தருணங்களில் அந்த இலக்கை நிறைவேற்றவில்லை என்பது, வேறு கதையாகும். தொடங்கிய கதை முஸ்லிம்

மேலும்...
பூமராங்

பூமராங் 0

🕔29.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – பூமராங் (boomerang) பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதமாகும். குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் இலக்கைத் தாக்கி விட்டு, எறிந்தவரை நோக்கித் திரும்பி வருவது பூமராங்கின் இயல்பாகும். ‘இலங்கையானது பௌத்த, இந்து மக்களின் பூமியாகும். அது வேறந்த மக்களுக்கும் சொந்தம்

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனும், கதவைத் தட்டும் கௌரவமும்

அமைச்சர் றிசாட் பதியுதீனும், கதவைத் தட்டும் கௌரவமும் 0

🕔27.May 2018

– ஏ.ஜி.எம். தௌபீக் – அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் அதிருப்தியுற்ற இலங்கை சீனி நிறுவனத்தின் (Lanka Sugar Company (Pvt) Limited) தொழிற் சங்கங்கள், கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் மீண்டும் சீனிக்கூட்டுத் தாபனத்தைக் கொண்டு வருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த ஆர்ப்பாட்டக் களம் அரசியல் களத்தை ஒரு கணம் சிந்திக்கத் தூண்டிவிட்டது. நாட்டின்

மேலும்...
தமிழ் மொழிச் சமூகங்களும், போருக்குப் பின்னரான புரிதல்களும்

தமிழ் மொழிச் சமூகங்களும், போருக்குப் பின்னரான புரிதல்களும் 0

🕔23.May 2018

– சுஐப்.எம். காசிம் – வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள் மீண்டும் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டிய தருணம் வந்துள்ளது. புலிகளின் போராட்டம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை, அரசியல் சித்தாந்த கோட்பாடுகளில் இத் தலைமைகளால் ஒன்றிணைக்க முடியாதுள்ளது. போராட்ட காலங்களில் பிரித்து வேறாக்கப்பட்ட தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல்

மேலும்...
ஆசையும் துயரங்களும்

ஆசையும் துயரங்களும் 0

🕔23.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – “எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”. மேலே உள்ளது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளியிட்ட கொள்கைப்

மேலும்...
அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும்

அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும் 0

🕔21.May 2018

– ஏ.எல். நிப்றாஸ் – களியோடைப் பாலத்திற்கு அருகில் நெல் களஞ்சியசாலையாகவும் தென்னந்தோப்புக்களாகவும் இருந்த பல ஏக்கர் நிலப்பரப்பை பார்ப்பதற்கு எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு நாள் ஹெலிகொப்டரில் வந்தார். அந்த நிலப்பரப்பிற்கு மேலாக பலமுறை ஹெலியில் வட்டமடித்த அஷ்ரஃப், “இங்கு ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்போகின்றோம். இது லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போலவும் இந்த கழியோடை ஆறு

மேலும்...
சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தோண்டும் பெருமிதக் குழி

சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தோண்டும் பெருமிதக் குழி 0

🕔11.May 2018

– பஷீர் சேகுதாவூத் – எந்தச் சிறுபான்மையினரதும் வாக்குகளின்றி, தனியே சிங்கள வாக்குகளால் மாத்திரம் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குச் சிங்களவர்களை, சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் கொண்டுவந்துவிடுவார்கள் போல் தெரிகிறது. மலையகத் தமிழ் மக்களின் தலைவர்களும், இலங்கைத் தமிழர் தலைவர்களும், இலங்கை முஸ்லிம் தலைவர்களும் தத்தமது இன மக்களின் வாக்குகள் இல்லாமல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்