Back to homepage

மத்திய மாகாணம்

தம்புள்ளை பள்ளிவாசலைப் படமெடுத்த பிக்குகள்; பொலிஸார் வரும் முன்பு அகன்றனர்

தம்புள்ளை பள்ளிவாசலைப் படமெடுத்த பிக்குகள்; பொலிஸார் வரும் முன்பு அகன்றனர் 0

🕔11.Jan 2016

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்கு ‘சிங்­ஹ லே’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப் பட்­டி­ருந்த ஜீப் வண்டியில் சென்ற இரு பௌத்த பிக்குகளும், இரு இளை­ஞர்­களும் பள்­ளி­வா­சலை புகைப்­படம் எடுத்துக் கொண்­ட­துடன் அயல் வீட்­டார்­க­ளிடம் பள்­ளி­வாசல் அப்­பு­றப்­ப­டுத்­தா­மைக்கான காரணத்தை வின­வி­யுள்­ளனர். ஜீப் வண்­டியின் முன்னால் ஒட்­டப்­பட்­டி­ருந்த ‘சிங்ஹலே’ ஸ்டிக்கர் பள்­ளி­வா­சலில் பொருத்தப்பட்­டி­ருந்த சீ.சீ.ரி.வி. கம­ராவில் பதி­வு­றாத வகையில் ஜீப்

மேலும்...
பாகிஸ்தான் பிரதமருடன் அமைச்சர் ஹக்கீம், கண்டியில் கலந்துரையாடல்

பாகிஸ்தான் பிரதமருடன் அமைச்சர் ஹக்கீம், கண்டியில் கலந்துரையாடல் 0

🕔6.Jan 2016

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை அமைச்சர் ஹக்கீம் – கண்டி மஹவலி ரீச் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக, இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் – இன்று புதன்கிழமை கண்டிக்கு விஜயம் மேற்கொண்டபோது, அவரை – அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் வரவேற்றார். ஹெலிகொப்டரில் கண்டி அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தினை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமரை, அமைச்சர்

மேலும்...
தலதா மாளிகை சென்ற பாகிஸ்தான் பிரதமருக்கு, பாரம்பரிய உடையில் தியவதனநிலமே வரவேற்பு

தலதா மாளிகை சென்ற பாகிஸ்தான் பிரதமருக்கு, பாரம்பரிய உடையில் தியவதனநிலமே வரவேற்பு 0

🕔6.Jan 2016

– க. கிஷாந்தன் – இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று புதன்கிழமை கண்டி தலதாமாளிகைக்கு சென்றார். பாகிஸ்தான் பிரதமருக்கு அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டோர் செங்கம்பள வரவேற்பு வழங்கினர். இதேவேளை, தலதாமாளிகை தியவதனநிலமே பிரதிப் நிலங்க தேல, பாரம்பரிய ஆடை அணிந்து விசேட வரவேற்பு

மேலும்...
லொறி மோதி, 31 வயது பெண் பலி

லொறி மோதி, 31 வயது பெண் பலி 0

🕔28.Dec 2015

– க. கிஷாந்தன் – கொத்மலை வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் வரதராஜ் சந்திரகலா (வயது 31) எனும் பெண், சம்பவ இடத்திலேயே பலியானார். மேற்படி பெண், பாதையைக் கடக்க முற்பட்ட வேளையில், நுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொறியில் மோதுண்டு பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா

மேலும்...
ஆமைகளுடன் நபர் கைது

ஆமைகளுடன் நபர் கைது 0

🕔16.Dec 2015

– க. கிஷாந்தன் – ஆமைகளை தன்வசம் வைத்திருந்த ஹட்டன், கொட்டகலையைச்  சேர்ந்த 58 வயதுடைய  நபரொருவரை பதுளை பொலிஸார் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்துள்ளனர். பதுளை ஹிந்தகொட பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து இந்த ஆமைகளை பிடித்துள்ள அந்நபர், அவற்றை உரப் பையினுள் வைத்து மறைத்துக் கொண்டு செல்லும் வேளையிலேயே கைதாகியுள்ளார். குறித்த உரப் பையினுள் நான்கு ஆமைகள் இருந்துள்ளன. வெளிநாடுகளுக்கு

மேலும்...
கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில்

கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில் 0

🕔15.Dec 2015

– க. கிஷாந்தன் – ஹட்டன் செனன் பகுதியில், கனரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் படுகாயமடைந்த  மூவர், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்வம் இன்று செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது. புத்தளத்திலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சீமெந்து ஏற்றி சென்ற கனரக வாகனமும், தலவாக்கலை வட்டகொடை பகுதியிலிருந்து வட்டவளை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும், ஹட்டன் – கொழும்பு பிரதான

மேலும்...
பாவனைக்கு உதவாத, பெருந்தொகை ஐஸ் கிறீம் வகைகள் அழிப்பு

பாவனைக்கு உதவாத, பெருந்தொகை ஐஸ் கிறீம் வகைகள் அழிப்பு 0

🕔11.Dec 2015

– க. கிஷாந்தன் – பாவனைக்குதவாத நிலையில் இருந்த பெருந்தொகையான ஐஸ்கீரிம் வகைகளை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைப்பற்றிய பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், அவற்றினை அழித்துள்ளனர். மேற்படி ஐஸ்கீரிம் வகைகளை விற்பனைக்காக கொண்டுச் சென்ற வாகனமொன்றினை, டிக்கோயா புளியாவத்தை நகரில் வைத்து,  பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைப்பற்றியுள்ளனர். கிடைத்த இரகசிய

மேலும்...
சிறுமி தூக்கிட்டு தற்கொலை

சிறுமி தூக்கிட்டு தற்கொலை 0

🕔10.Dec 2015

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவ, கெம்பியன் தோட்ட ஓல்டி பிரிவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் சகுந்தலாதேவி எனும் சிறுமி (வயது 14) இன்று வியாழக்கிழமை பிற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி இன்று பிற்பகல் தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில்

மேலும்...
பத்தாயிரம் வர்ணக் கடதாசியில் மோட்டார் சைக்கிள்; அசத்துகிறார் கந்தபளை இளைஞர்

பத்தாயிரம் வர்ணக் கடதாசியில் மோட்டார் சைக்கிள்; அசத்துகிறார் கந்தபளை இளைஞர் 0

🕔5.Dec 2015

க. கிஷாந்தன் – பத்தாயிரம் ஏ4 வர்ண கடதாசி தாள்களை கொண்டு, நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்திக அருண சாந்த என்ற இளைஞர், அழகான மோட்டார் சைக்கிள் ஒன்றை உருவமைத்துள்ளார். மேற்படி இளைஞர் ஒரு சாதாரண விவசாயி என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடதாசி தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும்

மேலும்...
குடியிருப்பில் ஏற்பட்ட தீயினால், பெறுமதியான பொருட்கள் நாசம்

குடியிருப்பில் ஏற்பட்ட தீயினால், பெறுமதியான பொருட்கள் நாசம் 0

🕔4.Dec 2015

– க. கிஷாந்தன் – தீ விபத்து காரணமாக, பொகவந்தலாவ லட்சுமி தோட்டம் மேல்பிரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் பெறுமதிமிக்க பொருட்கள் நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த குடியிருப்பில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து, திடீரென தீ பரவியமையினால், இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அறிய முடிகிறது. இதன்போது, அங்கிருந்த

மேலும்...
விசம் அருந்திய மாணவிகள் வைத்தியசாலையில்

விசம் அருந்திய மாணவிகள் வைத்தியசாலையில் 0

🕔3.Dec 2015

– க. கிஷாந்தன் – பாடசாலைக்கு வரும் வழியில் விசம் அருந்திய – இறம்பொடை இந்து கல்லூரியில் கல்விப் பயிலும் மூன்று மாணவிகள், ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறம்பொடை கெமிலிதென்ன தோட்டத்தை சேர்ந்த மூன்று மாணவிகளே இவ்வாறு விசமருந்திய நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு

மேலும்...
வைத்தியர்கள் வேலை நிறுத்தம்; காத்திருந்து, வீடு திரும்பினர் நோயாளிகள்

வைத்தியர்கள் வேலை நிறுத்தம்; காத்திருந்து, வீடு திரும்பினர் நோயாளிகள் 0

🕔3.Dec 2015

– க.கிஷாந்தன் – அரச வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலை வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை. இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய

மேலும்...
காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு 0

🕔29.Nov 2015

– க. கிஷாந்தன் – காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் யுவதியின் சடலம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களால் மீட்கப்பட்டதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த மோகனராஜ் பிரியந்தினி எனும் 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த யுவதி, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வேளையில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், இது

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் ஏற்பாட்டில், கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம் ஏற்பாட்டில், கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான சந்திப்பு 0

🕔27.Nov 2015

வெளிநாட்டு நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள கண்டி மாநகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான அமைச்சர்கள் மட்ட சந்திப்பொன்று, நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்றது. அமைச்சரும், மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சந்திப்பில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியல்ல, மலிக் சமரவிக்ரம, எம்.எச்.ஏ.ஹலீம், சரத் அமுனுகம உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும்...
கண்ணாடி ஏற்றிவந்த லொறி குடைசாய்ந்ததில், உதவியாளர் படுகாயம்

கண்ணாடி ஏற்றிவந்த லொறி குடைசாய்ந்ததில், உதவியாளர் படுகாயம் 0

🕔27.Nov 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா – பதுளை பிரதான வீதியிலுள்ள ஹக்கல தபால் நிலையத்திற்கு அருகாமையில் லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த உதவியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி கண்ணாடிகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றே இவ்வாறு குடைசாய்ந்தது. லொறியில் சாரதியுடன், உதவியாளர் ஒருவரும் பயணித்திருந்தார். விபத்தின்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்