Back to homepage

மேல் மாகாணம்

பிரதமராகிறார் ரணில்: நாளை சத்தியப்பிரமாணம்

பிரதமராகிறார் ரணில்: நாளை சத்தியப்பிரமாணம் 0

🕔15.Dec 2018

ரணில் விக்கிரமசிங்க, நாளை ஞாயிற்றுக்கிழமை பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். ​ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர், இத்தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். தனது வாழ்நாளில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிக்க மாட்டேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி

மேலும்...
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு 0

🕔14.Dec 2018

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளதாக, அவரின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார். தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்குநாளை உரையாற்றிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை

மேலும்...
மஹிந்த பிரதமராக பதவி வகிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க, உச்ச நீதிமன்றம் மறுப்பு

மஹிந்த பிரதமராக பதவி வகிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க, உச்ச நீதிமன்றம் மறுப்பு 0

🕔14.Dec 2018

பிரதமரும், அமைச்சரவையும் அந்தப் பதவிகளை வகிப்பதை தடைசெய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை நீக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த வகையில் பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்‌ஷ நீடிப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையுத்தரவை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக

மேலும்...
முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணத்தை இல்லாது ஒழிப்பதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது: மக்காவில் றிசாட் பதியுதீன்

முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணத்தை இல்லாது ஒழிப்பதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது: மக்காவில் றிசாட் பதியுதீன் 0

🕔14.Dec 2018

இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் உலக நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிழையான எண்ணங்களை இல்லாதொழிப்பதற்கு தக்க தருணம் ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலகளாவிய இஸ்லாமிய மையம் ஏற்பாட்டில், மக்கா – அல் முகர்ரமாஹ்வில் இடம்பெற்ற, சர்வதேச இஸ்லாமிய ஒருங்கிணைப்பு மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

மேலும்...
இடைக்காலத் தடையை நீக்குமாறு கோரும், மஹிந்த ராஜபக்ஷவின் மனு விசாரணைக்கு

இடைக்காலத் தடையை நீக்குமாறு கோரும், மஹிந்த ராஜபக்ஷவின் மனு விசாரணைக்கு 0

🕔14.Dec 2018

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை வகிப்பதற்கும் விதிக்கப்பட்டள்ள இடைகால தடையுத்தரவை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, இன்று வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தரப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு, சட்டவிதிமுறைகளுக்கு ஏற்புடையது அல்லவென தெரிவித்தே இந்த மனுத்

மேலும்...
ரணிலுக்கு வாக்களிக்காதது ஏன்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் விளக்கம்

ரணிலுக்கு வாக்களிக்காதது ஏன்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் விளக்கம் 0

🕔13.Dec 2018

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல், ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததால்தான், நேற்றைய தினம் நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையினை நிரூபிக்கும் யோசனையின் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தான் கலந்து கொள்ளவில்லை என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி்னர் சிவசக்தி

மேலும்...
ரணிலுக்கும் எனக்குமிடையில் எந்தவித ஒப்பந்தமும் இல்லை: சம்பந்தன் தெரிவிப்பு

ரணிலுக்கும் எனக்குமிடையில் எந்தவித ஒப்பந்தமும் இல்லை: சம்பந்தன் தெரிவிப்பு 0

🕔13.Dec 2018

– அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்பட்டு, தற்போது வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடிதத் தலைப்பில் சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஐக்கிய

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, அரசியலமைப்புக்கு முரண்: தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்

நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, அரசியலமைப்புக்கு முரண்: தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம் 0

🕔13.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமை,  அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதாக நொவம்பர் 09ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்த அறிவித்தலை எதிர்த்து நொவம்பர் 12ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா

மேலும்...
மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலை, பேலியகொடயில் கண்டெடுப்பு

மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலை, பேலியகொடயில் கண்டெடுப்பு 0

🕔13.Dec 2018

மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலையொன்று பேலியகொட – துட்டகைமுனு மாவத்தையிலுள்ள தொழிற்சாலையொன்றினுள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த அழைப்பொன்றினை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த தலை கண்டெடுக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை அதிகாலை, மேற்படி மனிதத் தலை கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து புதுக்கடை 05ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்துக்கு

மேலும்...
நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்குத் தீர்ப்பு: இன்று பிற்பகல் வழங்கப்படுகிறது

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்குத் தீர்ப்பு: இன்று பிற்பகல் வழங்கப்படுகிறது 0

🕔13.Dec 2018

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை பி.பகல் 4.00 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை பிரதம நீதியரசர் உள்ளிட்ட 07 நீதியரசர் குழாம் விசாரித்தது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட 13 தரப்புக்கள்,

மேலும்...
ரணிலுக்கான  பெரும்பான்மையினை நிரூபிக்கும் வாக்கெடுப்பை ஏற்க மாட்டோம்: கெஹலிய

ரணிலுக்கான பெரும்பான்மையினை நிரூபிக்கும் வாக்கெடுப்பை ஏற்க மாட்டோம்: கெஹலிய 0

🕔12.Dec 2018

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தை தாம் ஏற்கவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமான நாடாளுமன்றில் மேற்கொள்ளப்படும் எந்தத் தீர்மானத்தினையும் ஏற்றுக் கொள்வதற்கு, தாங்கள் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.  இந்த நாடாளுமன்றில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும்,

மேலும்...
ரணிலுக்கு பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்கும் வாக்கெடுப்பு: 117 பேர் ஆதரவு

ரணிலுக்கு பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்கும் வாக்கெடுப்பு: 117 பேர் ஆதரவு 0

🕔12.Dec 2018

நாடாளுமன்றில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்கும் வகையில் இன்று புதன்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவருக்கு சார்பாக 117 வாக்குகள் கிடைத்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த யோசனையின் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேற்படி யோசனைக்கு எதிராக எந்தவொரு வாக்கும் பதிவாகவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதன்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தது.

மேலும்...
பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு

பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு 0

🕔12.Dec 2018

பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், அவர்களின் பதவிகளை வகிப்பதற்கு எதிராக  தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளை அடுத்த வருடம் ஜனவரி 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. குறித்த மனுவை இன்று புதன்கிழமை நீதிமன்றம் எடுத்துக் கொண்ட போதே,  அதன் மேலதிக விசாணைகளை ஒத்தி வைத்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122

மேலும்...
அமில தேரருக்கு பணம் வங்கிய விவகாரம்: ரவியை கைதுசெய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு

அமில தேரருக்கு பணம் வங்கிய விவகாரம்: ரவியை கைதுசெய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு 0

🕔12.Dec 2018

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் நிதியினை தம்பர அமில தேரருக்கு ரகசிய கணக்கின் ஊடாக வழங்கிய குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கவை கைது செய்யுமாறு, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக பதவி வகித்த போது, லிட்ரோ எரிவாயு நிறுவனம் நிதியமைச்சின் கீழ் இருந்தது. முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக விசாரணை

மேலும்...
கடாபியை உதாரணம் கூறி, ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம்

கடாபியை உதாரணம் கூறி, ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம் 0

🕔11.Dec 2018

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த சமன் ரட்னபிரிய தொடர்பில் பொலிஸார் விசாரணை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் பிரகாரம் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  “லிபியாவில் கடாபிக்கு என்ன நடந்தது எனத் தெரியும்தானே,  நாங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்