Back to homepage

மேல் மாகாணம்

இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் சிக்கியது: பேருவளை கடலில் சம்பவம்

இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் சிக்கியது: பேருவளை கடலில் சம்பவம் 0

🕔6.Dec 2018

இரண்டு சந்தேக நபர்களுடன் 231 கிலோ 54 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை பேருவளை – பலப்பிட்டிய கடலில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று புதன்கிழமை இரவு கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 277 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் இது என பொலிஸ் ஊடகப்

மேலும்...
ரணிலுக்கு முடியாது: அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

ரணிலுக்கு முடியாது: அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔5.Dec 2018

நாட்டின் சட்டம், ஜனநாயகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணலில் விக்ரமசிங்க, முதலில் அவருடைய கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது, இந்தக் கருத்தினை அவர் வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இல்லாத

மேலும்...
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது 0

🕔5.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானதெனத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேற்படி வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமை 07 நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்ட மா அதிபர், இந்த விடயத்தை நீதிமன்றில்

மேலும்...
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதே, இறுதி வழியாகும்: மங்கள

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதே, இறுதி வழியாகும்: மங்கள 0

🕔5.Dec 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, நாடாளுமன்றில் குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவருவதே இறுதி வழியாக அமையும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடர்பில், தனது விமர்சனத்தை ‘ட்விட்டரில்’ வெளியிட்டுள்ள

மேலும்...
மஹிந்தவை ‘பிரதமர்’ எனக் குறிப்பிட்டதன் மூலம், நீதிமன்றை அவமதித்ததா ‘தி ஐலன்ட்’?

மஹிந்தவை ‘பிரதமர்’ எனக் குறிப்பிட்டதன் மூலம், நீதிமன்றை அவமதித்ததா ‘தி ஐலன்ட்’? 0

🕔5.Dec 2018

மஹிந்த ராஜபக்ஷவை ‘பிரதமர்’ எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிடடதன் மூலம் ‘தி ஐலன்ட்’ பத்திரிகை, நீதிமன்ற அவமதிப்பினை மேற்கொள்கிறா என்கிற கேள்வியுடன், ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் (03ஆம் திகதி) மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐக்கிய

மேலும்...
அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி

அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி 0

🕔4.Dec 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஒரு வாரத்துக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். அதேவேளை, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்தாலும், ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் அவர் தனது நிலைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு, இன்று மாலை கொழும்பு

மேலும்...
தொடர்ந்தும் தவறுகளைச் செய்ய வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிசாட் வேண்டுகோள்

தொடர்ந்தும் தவறுகளைச் செய்ய வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிசாட் வேண்டுகோள் 0

🕔4.Dec 2018

நாட்டின் முதன் மகனான ஜனாதிபதி, அரசியலமைப்பை தன் கையிலெடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து கொண்டிருக்காமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அலரி மாளிகையில் இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு

பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு 0

🕔4.Dec 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த, பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரமராக்குவதற்கு ஜனாதிபதி மீண்டும் முயற்சி எடுத்து வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றில் பெரும்பான்மையினைக் கொண்டுள்ள

மேலும்...
பிரதமர், அமைச்சர்களுக்கான இடைக்காலத் தடைக்கு எதிராக மேன்முறையீடு

பிரதமர், அமைச்சர்களுக்கான இடைக்காலத் தடைக்கு எதிராக மேன்முறையீடு 0

🕔4.Dec 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் அவர்களின் பதவிகளை வகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக, இன்று செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நேற்றைய தினம்

மேலும்...
கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும்: மஹிந்த தரப்புக்கு ஹக்கீம் எச்சரிக்கை

கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும்: மஹிந்த தரப்புக்கு ஹக்கீம் எச்சரிக்கை 0

🕔4.Dec 2018

ஜனாதிபதி தனது தவறை உணர்ந்து, பெரும்பான்மை பலம் இருக்கின்ற எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இனிமேலும் இதில் இழுத்தடிப்புச் செய்யப்படுமாக இருந்தால், நாங்கள் இதைவிட தீவிரமாக வேறுபல நடவடிக்கைககளில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின்

மேலும்...
ஜனாதிபதிக்கும், அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கும், அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் 0

🕔4.Dec 2018

ஜனாதிபதிக்கும் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று செவ்வாய்கிழமை காலை, விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது; நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக, பொதுச்சேவைகளை எந்தவித தடைகளுமின்றி தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளையும் கட்டளைகளையும் ஜனாதிபதி வழங்கியதாக, அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச பாதுகாப்பினைப் போன்றே நாட்டுக்கும் பொதுமக்களுக்குமான

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம் 0

🕔4.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குறித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள்

மேலும்...
225 எம்.பி.கள் கையெழுத்திட்டாலும், ரணிலை பிரதமராக்க மாட்டேன்: ஐ.தே.முன்னணியிடம் மைத்திரி தெரிவிப்பு

225 எம்.பி.கள் கையெழுத்திட்டாலும், ரணிலை பிரதமராக்க மாட்டேன்: ஐ.தே.முன்னணியிடம் மைத்திரி தெரிவிப்பு 0

🕔3.Dec 2018

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் கையெழுத்திட்டாலும், அவரை ஒருபோதும் தான் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெற்றபோதே, ஜனாதிபதி இதனைக் கூறியதாக, லக்ஷ்மன்

மேலும்...
இடைக்கால தடை உத்தரவுடன் உடன்பாடில்லை; நாளை உச்ச நீதிமன்றம் செல்கிறோம்: மஹிந்த

இடைக்கால தடை உத்தரவுடன் உடன்பாடில்லை; நாளை உச்ச நீதிமன்றம் செல்கிறோம்: மஹிந்த 0

🕔3.Dec 2018

பிரதமராக தான் பதவி வகிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுடன், தனக்கு உடன்பாடு கிடையாது என்று, மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த இடைக்காலத் தடைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் நாளைக் காலை மேன்முறையீடு ஒன்றினைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், தனது அறிக்கையில் மஹிந்த தெரிவித்துள்ளார். மஹிந்த

மேலும்...
இடைக்காலத் தடைக்கு எதிராக, மேன்முறையீடு செய்வோம்: நாமல் தெரிவிப்பு

இடைக்காலத் தடைக்கு எதிராக, மேன்முறையீடு செய்வோம்: நாமல் தெரிவிப்பு 0

🕔3.Dec 2018

பிரதமர் பதவி வகிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடைக்கு எதிராக, தாங்கள் மேன்முறையீடு செய்யப் போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பக்கத்திலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேன்முறையீடு செய்வது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரமுகர்களும் சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்