Back to homepage

மேல் மாகாணம்

கொல்ல முயன்றவரை சந்தித்தார் மைத்திரி

கொல்ல முயன்றவரை சந்தித்தார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, படுகொலை செய்வதற்கு முயற்சித்த விடுதலைப் புலிகள் உறுப்பினர் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அமைச்சராக பணியாற்றிய 2006 ஆம் ஆண்டு பொலன்னறுவையில் வைத்து அவரை படுகொலை செய்ய முயற்சித்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சிவராஜா ஜெனிபன் என்பவர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.தேசிய உடை அணிந்திருந்த புலிகளின் முன்னாள்

மேலும்...
இந்தியாவும் அமெரிக்காவும்தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம்: பசில் ராஜபக்ஷ

இந்தியாவும் அமெரிக்காவும்தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம்: பசில் ராஜபக்ஷ

இலங்கையில முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக புதிய ஆட்சியைக் கொண்டுவருவதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பின்னணியில் இருந்து செயற்பட்டதாக மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே பசில் ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும்...
எல்லை நிர்ணயம் முன்னதாக நிறைவுபெற்றால், ஜுலையில் தேர்தல்; பைசர் முஸ்தபா

எல்லை நிர்ணயம் முன்னதாக நிறைவுபெற்றால், ஜுலையில் தேர்தல்; பைசர் முஸ்தபா

எல்லை நிர்ணய நடவடிக்கைகள் எதிர்வரும் ஜுலை மாத்திற்கு முன்னர் நிறைவு பெறுமாயின், ஜுலை மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்த முடியும் என்று உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.ஆறு மாத்திற்குள் எல்லை நிர்ணய செயற்பாடுகளை நிறைவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி

மேலும்...
‘சிங்க லே’ எழுதியதன் பின்னணியில், ஊடகவியலாளர் ஒருவர் உள்ளார்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

‘சிங்க லே’ எழுதியதன் பின்னணியில், ஊடகவியலாளர் ஒருவர் உள்ளார்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

‘சிங்க லே’ என இனவாதத்தினைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முஸ்லிம்களின் வீட்டு கதவுகளில் நிறப்பூச்சுக் கொண்டு ‘சிங்க லே’ என எழுதப்பட்டமை, மற்றும் அவ்வாறான செயற்பாடுகள் குறித்து இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜிதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்...
சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் சீனக் குழுவுடன் அமைச்சர்  ஹக்கீம் கலந்துரையாடல்

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் சீனக் குழுவுடன் அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடல்

– ஜெம்சாத் இக்பால் – யாழ்ப்பாணம் மற்றும் கற்;பிட்டி பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு கலந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப குழுவினருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பணிப்புரை விடுத்துள்ளார். இவ்விடயம்

மேலும்...
அமைச்சரவையில் மாற்றமில்லை

அமைச்சரவையில் மாற்றமில்லை

அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வருடத்தில், அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை, புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவிருக்கின்ற கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில்

மேலும்...
விசேட வைத்தியர்களுக்கான ‘சனலிங்’ கட்டணத்தில் கட்டுப்பாடு

விசேட வைத்தியர்களுக்கான ‘சனலிங்’ கட்டணத்தில் கட்டுப்பாடு

தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களைச் சந்திப்பதற்கான (சனலிங்) கட்டணம், 250 ரூபாவுக்கும், 2000 ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவிலேயே அறவிடப்பட வேண்டும என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, விசேட வைத்தியர்கள் நோயாளர்களை குறைந்த பட்சம் 10 நிமிடங்களேனும் பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது தனியார் வைத்தியசாலையில் நோயாளர்களை விசேட வைத்தியர்கள் சில நிமிடங்கள் மாத்திரமே பரிசோதித்து

மேலும்...
தாஜுத்தீன் கொலை; சி.சி.ரி.வி காட்சிகளை வெளிநாடு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

தாஜுத்தீன் கொலை; சி.சி.ரி.வி காட்சிகளை வெளிநாடு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை வெளிநாட்டு, விஷேட நிபுனர்களுக்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றத்தடுப்பு விசாரணை பிரிவிற்கு, கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிபதி நிசான்த பீரிஸ் இன்று வியாழக்கிழமை இந்த அனுமதியை வழங்கினார். இதற்கமைய, விஷேட உதவியை பெற்றுக் கொள்ளக்கூடிய வெளிநாட்டு நிறுவனம் தொடர்பாக ஒருவாரத்திற்குள் நீதி மன்றத்திற்கு அறிவிக்குமாறு குற்ற

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கோட்டா ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கோட்டா ஆஜர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், இன்று வியாழக்கிழமை ஆஜரானார்.எவன் கார்ட் தொடர்பான விசாரணையின் பொருட்டு, வாக்கு மூலம் வழங்குவதற்காகவே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வருகை தந்தார்.முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக திசாநாயக்க, பெற்றோலிய வள கட்டுப்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் தலைவர் சொய்சா உள்ளிட்டோரும் இதன்போது வருகை தந்தனர்.

மேலும்...
சமல் ராஜபக்ஷவுக்கு தலைமைப் பதவி

சமல் ராஜபக்ஷவுக்கு தலைமைப் பதவி

மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம்  நேற்று  புதன்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்களாகவும், இணைத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்ட 54 பேர் தமது நியமன கடிதங்களை பெற்றுக் கொண்டனர். அந்த வகையில், அனைத்து மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் மற்றும் இணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாபதியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்