Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

புத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம்

புத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம்

புத்தளம் – ஆனமடுவ பகுதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டல் இன்று ஞாயிற்றுக்கிழமை தீயினால் எரிந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஹோட்டலின் கணிசமான பகுதிகள் சேதமடைந்தள்ளன. இதேவேளை, நாசாகார செயல் மூலமாக இந்த ஹோட்டல் எரிந்ததா, அல்லது விபத்தின் மூலம் தீப்பற்றியதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கண்டியில் கடந்த வாரம்

மேலும்...
தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரியாக, நுஸ்ரத் பதவியேற்பு

தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரியாக, நுஸ்ரத் பதவியேற்பு

– பாறுக் ஷிஹான் –தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி,  தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.பதுளை மாவட்டம் குருத்தலாவையைச் சேர்ந்த 28 வயதான அப்துல் நஹீம் நஸ்லூன் நுஸ்ரத் என்பவரே இன்று புதன்கிழமை, உதவித் தேர்தல் ஆணையாளராக தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில், இலங்கையின் 02

மேலும்...
ரணிலுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை வரும்; ஐ.தே.க. அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவிப்பு

ரணிலுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை வரும்; ஐ.தே.க. அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறினார். “ஐக்கிய தேசியக்கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் முதற் கட்டமாக தலைமைத்துவத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும்...
வரிசையில் நின்று வாக்களித்து, வியப்பில் ஆழ்த்தினார் மைத்திரி

வரிசையில் நின்று வாக்களித்து, வியப்பில் ஆழ்த்தினார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கினை இன்றைய தினம் பதிவு செய்துள்ளார். பொலநறுவை ஸ்ரீ வித்யாலோக விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு, தனது மகன் தஹம் சிறிசேனவுடன் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களுடன் வரிசையில் நின்று – வாக்களித்தார். இன்று காலை 10.00 மணியளவில் ஜனாதிபதி தனது வாக்கை பதிவு செய்தார்.

மேலும்...
வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்கு, சிறுவனைப் பயன்படுத்தியமை தொடர்பில் சர்ச்சை

வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்கு, சிறுவனைப் பயன்படுத்தியமை தொடர்பில் சர்ச்சை

சிறுவனொருவன் வாக்குப் பெட்டிகளைச் சுமந்து செல்லும் காட்சியொன்று புகைப்படமாக வெளியானதை அடுத்து, அது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பொலநறுவை மாவட்டத்திலுள்ள புளத்சிங்கள தேசிய கல்விக் கல்லூரி வாக்களிப்பு நிலையத்திலிருந்து, மற்றொரு வாக்களிப்பு நிலையத்துக்கு, வாக்குப் பெட்டிகளை அனுப்புவதற்காக, குறித்த பெட்டியை அந்தச் சிறுவன் சுமந்து சென்றிருந்தான். இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதாகத்

மேலும்...
வாழ வைத்த புத்தளம் மண்ணை, ஒரு போதும் ஆளும் எண்ணம் எமக்கில்லை: அமைச்சர் றிசாட் உருக்கம்

வாழ வைத்த புத்தளம் மண்ணை, ஒரு போதும் ஆளும் எண்ணம் எமக்கில்லை: அமைச்சர் றிசாட் உருக்கம்

  – சுஐப் எம். காசிம் – அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்ற அத்தனை நடவடிக்கைகளையும், உதவிகளையும் மேற்கொள்வோம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட்

மேலும்...
இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட்

இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட்

  புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும் இதற்குப் பலியாகிவிடக் கூடாது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.   புத்தளத்தில், ஹுசைனியாபுரம் (உளுக்காப்பள்ளம்), ஹிதாயத் நகர் (கரிக்கட்டை),

மேலும்...
சின்ன நண்பியை தேடிச் சென்ற ஜனாதிபதி; பாட்டுப்பாடி மகிழ்ந்தார்

சின்ன நண்பியை தேடிச் சென்ற ஜனாதிபதி; பாட்டுப்பாடி மகிழ்ந்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் கொழும்பு வந்து சந்தித்த, பதுளையைச் சேர்ந்த ஏழு வயதான எம்.என். அமானி ராயிதா எனும் சிறுமியை மறந்திருக்க முடியாது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பதுளை சென்றிருந்த ஜனாதிபதி, சிறுமி ராயிதாவின் வீட்டுக்கு வருகை தந்து, அவருடைய நண்பர்களுடன் பேசியும், பாட்டுப்பாடியும் மகிழ்ந்தார். அமானி ராயிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் அண்மையில் ஜனாதிபதியை

மேலும்...
வன்னி சிறுபான்மை முஸ்லிம்களைப் பின்பற்றி, நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை

வன்னி சிறுபான்மை முஸ்லிம்களைப் பின்பற்றி, நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை

  “வன்னி மாவட்டத்தில் ஜீவ மரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள், ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர். அதுபோல் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவங்ளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாரம்மல பிரதேச சபைத்

மேலும்...
வாக்குச் சீட்டை படம் பிடித்த ஆசிரியர் கைது; தபால் மூல வாக்களிப்பின் போது சம்பவம்

வாக்குச் சீட்டை படம் பிடித்த ஆசிரியர் கைது; தபால் மூல வாக்களிப்பின் போது சம்பவம்

தபால் மூல வாக்களிப்பின் போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினைப் படம் பிடித்த ஆசியர் ஒருவரை, கெபிடிகொல்லாவ பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ஹொரவப்பொத்தானையில் இடம்பெற்றது. 44 வயதுடைய ஆசிரியர் ஒருவர், தபால் மூல வாக்களிப்பின்போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினை, வாக்களிப்பு நிலையத்தில் வைத்து தனது கைத்தொலைபேசி மூலமாக படம் பிடித்துள்ளார். இதனைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்