Back to homepage

திருகோணமலை

கையொப்பமிட அனுமதிக்காமல், வெளியிலிருந்து ஆட்களை வரவழைத்து என்னைத் தாக்கினார்கள்: வைத்தியசாலையில் இருந்து, ஆசிரியை பஹ்மிதா வாக்குமூலம்

கையொப்பமிட அனுமதிக்காமல், வெளியிலிருந்து ஆட்களை வரவழைத்து என்னைத் தாக்கினார்கள்: வைத்தியசாலையில் இருந்து, ஆசிரியை பஹ்மிதா வாக்குமூலம் 0

🕔2.Feb 2022

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு, தான் இன்று (02) கடமைக்குச் சென்றபோது, தனக்கு கையெழுத்திடுவதற்கான புத்தகத்தை தருவதற்கு நிர்வாகம் மறுத்து, தன்னை வெளியில் இருக்க வைத்ததாகவும், வெளியிலிருந்து ஆட்களை நிருவாகத்தினர் வரவழைத்து தன்னைத் தாக்கியதாகவும், வைத்தியசாலையில் அனுதிமதிக்கப்பட்டுள்ள ஆசிரியை பாத்திமா பஹ்மிதா தெரிவித்துள்ளார். தனது உரிமைக்காக சட்ட ரீதியாக தான் போராயடி நிலையில், நீதிமன்றமும் கல்வியமைச்சும்

மேலும்...
ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம்

ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம் 0

🕔2.Feb 2022

– எ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – திருகோணமலை ஷண்முஹா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து கொண்டு சென்ற பாத்திமா பஹ்மிதா எனும் ஆசிரியை, இன்று பாடசாலைக்குள் கூடியிருந்த வெளியாட்கள் சிலரால் மிரட்டப்பட்டதாகவும், இதன்போது நபரொருவரால் கழுத்து நெரிக்கப்பட்ட ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்டளதாகவும் தெரியவருகிறது. ஹபாயா அணிந்து சென்றமை காரணமாக ஒரு தடவை பாடசாலையிலிருந்து குறித்த

மேலும்...
கைவினைஞர்களுக்கான போட்டியில் தெரிவானவர்களுக்கு கௌரவிப்பு

கைவினைஞர்களுக்கான போட்டியில் தெரிவானவர்களுக்கு கௌரவிப்பு 0

🕔6.Jan 2022

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்திலுள்ள கைவினைஞர்களுக்கான ‘ஷில்பா அபிமானி’ மாகாண கைவினைப் போட்டி 2021இல், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பல்வேறு வகையான தயாரிப்புக்களை வழங்கியவர்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட கைவினைஞர்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (05) கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது. தேசிய கைவினைப் பேரவையினால் நடத்தப்பட்ட

மேலும்...
குறுஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் கைதான சந்தேக நபர்கள் மூவருக்கு பிணை

குறுஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் கைதான சந்தேக நபர்கள் மூவருக்கு பிணை 0

🕔16.Dec 2021

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றினால் இன்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைதான மிதப்பு பால உரிமையாளர் உள்ளிட்டோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் கிண்ணியா நகர சபைத் தவிசாளர்

மேலும்...
கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் பண்டாரநாயக்க, கடமைகளைப் பொறுப்பேற்பு

கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் பண்டாரநாயக்க, கடமைகளைப் பொறுப்பேற்பு 0

🕔7.Dec 2021

– பாறுக் ஷிஹான் – கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.எம்.எல். பண்டாரநாயக்க தனது கடமைகளை இன்று (7) பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தின் பின்னர் அவர் தனது கடமையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷட அதிகாரியான

மேலும்...
கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்க மறியல்

கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்க மறியல் 0

🕔25.Nov 2021

திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான கிண்ணியா நகர சபை தவிசாளர் எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் இன்று பகல் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ்

மேலும்...
தௌபீக் எம்.பியின் வீடு மீது தாக்குதல்: கிண்ணியாவில் சம்பவம்

தௌபீக் எம்.பியின் வீடு மீது தாக்குதல்: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔23.Nov 2021

(படங்கள்: பைஷல் இஸ்மாயில்) கிண்ணியா – குறுஞ்சாக்கேணி ஆற்றை கடப்பதற்காக, மிதவைப் பாலத்தில் பயணித்த போது – இன்று (23) நடந்த விபத்தில் 06 பேர் மரணித்தமையினை அடுத்து ஆத்திரம் கொண்ட பொதுமக்கள், கிண்ணியாவிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட

மேலும்...
காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது வரலாற்றுத் தவறு: இம்ரான் எம்.பி

காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது வரலாற்றுத் தவறு: இம்ரான் எம்.பி 0

🕔11.Sep 2021

– பைஷல் இஸ்மாயில் – நடைமுறையிலுள்ள காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது இந்த அரசாங்கம் செய்யும் வரலாற்றுத் தவறாகும் என்று திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளதோடு, இந்தத் தவறை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “முஸ்லிம் விவாக, விகாரத்துச் சட்டம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்த

மேலும்...
திருகோணமலை ‘கிறீன்’ வீதி சந்தியில், இரண்டு  கைக்குண்டுகள் கண்டெடுப்பு

திருகோணமலை ‘கிறீன்’ வீதி சந்தியில், இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுப்பு 0

🕔30.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் – திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘கிறீன்’ வீதி (பசுமை வீதி) சந்தியில் – வடிகான் அருகே இரண்டு கைக்குண்டுகள் இன்று (30) இரவு கண்டெடுக்கப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர், கண்டெடுக்கப்பட்ட குண்டுகளை – நாளை செயலிழக்கச் செய்வர் என பொலிஸார் மேலும்

மேலும்...
கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் அவசர தொலைபேசி இலக்கங்கள்: கொவிட் குறித்து தொடர்பு கொள்ளலாம்

கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் அவசர தொலைபேசி இலக்கங்கள்: கொவிட் குறித்து தொடர்பு கொள்ளலாம் 0

🕔17.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் கொவிட் 19 குறித்து தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி (Hotline) இலக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்தந்த மாவட்டத்துக்கு வழங்கி வைக்கப்பட்ட இலக்கத்துடன், குறித்த மாவட்ட மக்கள் தொடர்பு கொண்டு கொவிட் 19 நோய்த் தொற்று பற்றிய மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் அதற்கான தீர்வுகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள

மேலும்...
கிழக்கு மாகாண இணையத்தளத்தில் தமிழ் புறக்கணிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம்

கிழக்கு மாகாண இணையத்தளத்தில் தமிழ் புறக்கணிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம் 0

🕔4.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்மொழிக்கும் உரிய இடம் வழங்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் – கிழக்கு மாகாண ஆளுநர்  அநுராதா யகம்பத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்; ‘கிழக்கு மாகாணத்தில் மூன்று

மேலும்...
கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்று, தீ வைத்த தாய் கைது

கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்று, தீ வைத்த தாய் கைது 0

🕔13.Jul 2021

புதிதாகப் பிறந்த குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டில் கந்தளாயில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த 35 வயதுடை பெண் என்று பொலிஸார் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த

மேலும்...
புலிகளைப் போற்றி எழுதியவர் கைது

புலிகளைப் போற்றி எழுதியவர் கைது 0

🕔3.Jul 2021

புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைப் போற்றி, சமூக ஊடகத்தில் எழுதியமைக்காக, திருகோணமலையில் 24 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஆட்டோ சாரதியான

மேலும்...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு,  பீடமாக தரமுயர்வு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, பீடமாக தரமுயர்வு 0

🕔21.Jun 2021

– பைஷல் இஸ்மாயில் – கிழக்குப் பல்கலைக் கழகத்தின்  திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் என்கின்ற கற்கை நெறியானது திருகோணமலை வளாகம் கிழக்கு பல்கைக்கழகத்தால் 2008 ஆம் ஆண்டிலிருந்து கற்பிக்கப்பட்டு, சித்த மருத்துவமும் சத்திர சிகிச்சை மானியமும் (BSMS) என்ற பட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும்...
கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔5.Jun 2021

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் 07ஆம் திகதி கிடைக்கப்பெறவுள்ளன. கொவிட்-19 தொற்றால் கிழக்கு மாகாணத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்